Science behind Indian traditions | இந்திய மரபுகளின் அறிவியல்
Science behind Indian traditions: நான் என்னுடைய பதிவுகளில் பெரும்பாலும் இந்திய கலாச்சாரம், இந்திய புராணம் சார்ந்த தகவல்கள், அதன்பின் ஒளிந்திருக்கும் வியக்கத்தக்க அறிவியல் உண்மைகள் பற்றி தான் எழுதி வருகிறேன். அதே போன்று இந்தப் பதிவிலும் நம்முடைய சிறப்புமிக்க கலாச்சாரத்தில் ஒளிந்திருக்கும் சில அறிவியல் உண்மைகளைப் பற்றி காணவிருக்கிறோம். வாருங்கள் காண்போம். ஐம்புலன்களை தூண்டும் கோவில்: இந்திய கோவில்கள் பொருத்தமட்டில் ஏராளமான அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வுகள் நிகழ்ந்துள்ளது, இன்றும் நிகழ்ந்து வருகிறது. அவற்றில் என்னை மிகவும் நெகிழச் செய்த ஒரு அறிவியல் ஆய்வு பற்றி இங்கு நான் கூற விரும்புகிறேன். இந்திய கோவில்களுக்குள் நுழையும்போது, இயற்கையாகவே நம்முடைய ஐம்புலன்களும் நன்கு தூண்டப்படுகிறது. எப்படி என்று சொல்கிறேன் கேளுங்கள். தொடு உணர்வு- தெய்வ வழிபாட்டின்போது கற்பூரத்தை தொட்டு வணங்கும் போது தூண்டப்படுகிறது. பார்வை உணர்வு - கோவில்களை சுற்றிலும் எரிந்து கொண்டிருக்கும் தீபங்களை பார்க்கும்போது தூண்டப்படுகிறது. சுவை உணர்வு - கோவில் அபிஷேகம் முடிந்த பின்ப