இந்த வலைத்தளத்தில் என்னுடைய சுய வாழ்க்கை அனுபவங்கள், கதைகள், பொது அறிவு தகவல்கள் மற்றும் சுய மேம்பாடு
சார்ந்த தகவல்கள் போன்றவற்றைப் பதிவு செய்து உள்ளேன். இவையாவும் என்னால் சுயமாக எழுதப்பட்டவையே!!
வணக்கம் நண்பர்களே! இந்தப் பதிவில் நான் உங்களை 725 வருடங்கள் முன்னோக்கி அழைத்துச் செல்லப் போகிறேன். ஆம்! நாம் 1295 ஆம் கால கட்டத்திற்குச் செல்லப் போகிறோம். 1295 ஆம் ஆண்டு மார்க்கோ போலோ என்னும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஆய்வுப் பணியாளர் ஆசியக் கண்டத்தில் பயணம் மேற்கொண்டார். அப்போது நம் பாண்டிய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட தமிழகத்தையும் அவர் சுற்றினார். அந்தக் காலகட்டத்தில் தமிழகம் எவ்வாறு செல்வ செழிப்புடனும், அழகுடனும் விளங்கியது என்பதை "மார்க்கோபோலோவின் பயணங்கள்" எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்தக் தமிழ்ப் பயணக் குறிப்புகளை பற்றி இந்தப் பதிவில் நாம் காணவிருக்கிறோம். வாருங்கள் காண்போம்! பழக்கவழக்கங்கள்: 1280 ஆம் காலகட்டத்தில் குலசேகர பாண்டியன் என்னும் பாண்டிய மன்னன், தமிழகத்தை ஆட்சி செய்து வந்தார். அப்போது அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும் அமர்வதற்கும், உணவு உண்பதற்கும் தரையையே பயன்படுத்தினர். தமிழ் மக்கள் அனைவரும் மண்ணை தங்கள் தாய்க்கு நிகராக நேசித்து வாழ்ந்தனர். மேலும் நோய்த் தொற்றுகளில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வீட்டைச் சுற்றி மாட்டுச் சாணத்
R easons why you should read a book: நான் என்னுடைய புத்தகம் பற்றிய கடந்த பதிவுகளில், "எது சிறந்த புத்தகம்? எவ்வாறு புத்தகம் படிப்பது? புத்தகத்தின் மூலம் பயனடைவது எப்படி?" என்ற மூன்று கேள்விகளுக்கும் விடையளிக்கும் வகையில் என்னுடைய பதிவுகளை எழுதியிருந்தேன். அதுபோல, இந்தப் பதிவில் புத்தகங்கள் ஏன் படிக்கவேண்டும்? என்பதற்கான இரண்டு முக்கிய காரணங்கள் பற்றிக் காணவிருக்கிறோம். வாருங்கள் காண்போம்! உங்கள் படைப்பாற்றலை மேம்படுத்தும்: ஒரு புத்தகத்தை நாம் படிக்கும்போது, அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைப் பற்றி நாம் இயல்பாக சிந்திக்கத் தொடங்குவோம். இந்த வரியின் கருத்துக்கள் சரியானதா? நடைமுறைக்கு ஏற்றதா? என்று பல கேள்விகள் உங்களில் எழத் தொடங்கும். புத்தகத்தின் ஆசிரியர் கூறியுள்ள கருத்துக்களை நீங்கள் புரிந்து கொள்ள முற்படும் போது உங்களின் படைப்பாற்றல் திறன் (Creativity) இயல்பாக அதிகரிக்கும். எதையும் குறுகிய வட்டத்தில் சிந்திக்காமல் அனைத்து கோணங்களிலும் உங்கள் மூளை சிந்திக்கத் தொடங்கி விடும். இதை நான் பிறரிடம் பேசி தெரிந்து கொண்டாலே அது எனக்கு பயனளிக்குமே? என்ற
இந்த பூலோகம் செயல்பட காரணமாக இருப்பது நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதாவது நீர் உருவாகக் காரணமாக நிலமும், நெருப்பு உருவாகக் காரணமாக காற்றும், காற்று உருவாகக் காரணமான ஆகாயமும் இருக்கிறது. இவற்றில் ஆகாயம் மட்டும் மற்ற பூதங்களின் சார்பின்றி இருக்கிறது. அதன்பின் ஒளிந்துள்ள ரகசியத்தையே இந்த பதிவில் நாம் காணவிருக்கிறோம். வாருங்கள் காண்போம்! கோவில் அமைந்துள்ள இடம்: அப்படி என்ன சிதம்பர ரகசியம் என்று நீங்கள் சிந்திக்கலாம்! நான் கூறப்போவதே அந்த சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய ரகசியம் தான். ஆம் நண்பர்களே! அந்தக் கோவிலுக்கென பல சிறப்பம்சங்கள் உள்ளன. அவற்றுள் மிக முக்கியமான ஒரு அம்சமே அந்தக் கோவில் அமைந்துள்ள இடம் . அதாவது, உலக காந்த ஈர்ப்பு விசையின் மையப் பகுதியில் தான் சிதம்பர நடராஜர் கோவில் அமைந்துள்ளது. அதன் காரணமாக, இந்தக் கோவிலுக்கு மேலே பறக்கும் எந்த ஒரு செயற்கைக் கோள்களும் செயலிழந்து போவதாக வானியல் அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும் இந்தக் கோவிலில் மூன்று வகையான வழிபாடுகள் அரங்கேறி வருகின்றன. அந்த மூன்று வழிபாடுகளும் இந்த க
கருத்துகள்
கருத்துரையிடுக