Science behind Indian traditions | இந்திய மரபுகளின் அறிவியல்
Science behind Indian traditions:
நான் என்னுடைய பதிவுகளில் பெரும்பாலும் இந்திய கலாச்சாரம், இந்திய புராணம் சார்ந்த தகவல்கள், அதன்பின் ஒளிந்திருக்கும் வியக்கத்தக்க அறிவியல் உண்மைகள் பற்றி தான் எழுதி வருகிறேன். அதே போன்று இந்தப் பதிவிலும் நம்முடைய சிறப்புமிக்க கலாச்சாரத்தில் ஒளிந்திருக்கும் சில அறிவியல் உண்மைகளைப் பற்றி காணவிருக்கிறோம். வாருங்கள் காண்போம்.
ஐம்புலன்களை தூண்டும் கோவில்:
இந்திய கோவில்கள் பொருத்தமட்டில் ஏராளமான அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வுகள் நிகழ்ந்துள்ளது, இன்றும் நிகழ்ந்து வருகிறது. அவற்றில் என்னை மிகவும் நெகிழச் செய்த ஒரு அறிவியல் ஆய்வு பற்றி இங்கு நான் கூற விரும்புகிறேன்.
இந்திய கோவில்களுக்குள் நுழையும்போது, இயற்கையாகவே நம்முடைய ஐம்புலன்களும் நன்கு தூண்டப்படுகிறது. எப்படி என்று சொல்கிறேன் கேளுங்கள்.
தொடு உணர்வு- தெய்வ வழிபாட்டின்போது கற்பூரத்தை தொட்டு வணங்கும் போது தூண்டப்படுகிறது.
பார்வை உணர்வு - கோவில்களை சுற்றிலும் எரிந்து கொண்டிருக்கும் தீபங்களை பார்க்கும்போது தூண்டப்படுகிறது.
சுவை உணர்வு - கோவில் அபிஷேகம் முடிந்த பின்பு கொடுக்கப்படும் நெய்,பால் மற்றும் தயிர் கலந்த பிரசாதத்தை உண்ணும்போது தூண்டப்படுகிறது.
வாசனை உணர்வு - பூஜையின் போது உபயோகிக்கப்படும் ஊதுபத்தி மற்றும் மலர்களின் மூலம் தூண்டப்படுகிறது.
செவி உணர்வு - பூஜையின் போது ஒலிக்கும் கோவில் மணியின் சப்தத்தின் மூலம் தூண்டப்படுகிறது.
அபிஷேகம் கூறும் அறிவியல்:
பொதுவாக, அனைத்து கோவில்களிலும் ஒரு குறிப்பிட்ட நாளில் தெய்வத்தின் சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கமாகும். இதற்கு ஒரு முக்கிய அறிவியல் காரணம் உள்ளது. கிரானைட் கற்களால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த அற்புதமான சிலைகள் சரியான பராமரிப்பை பெறாவிட்டால் நாளடைவில் பிளவுபட்டு உடைவதற்கு வாய்ப்புள்ளது. எனவே பால், எண்ணெய், தேன் மற்றும் பழங்களைக் கொண்டு அபிஷேகங்கள் நிகழ்த்தும்போது இந்த சிலைகள் எளிதில் பழுதடைந்து உடைவதை தவிர்க்கலாம்.
இதற்கான மற்றொரு காரணம், கோவில் கருவறை சிலைகளின் அடித்தளமானது தங்கம், வெள்ளி மற்றும் ஈயத்தின்(lead) கலவையால் உருவாக்கப்பட்டதாகும். இதன் மீது பால் மற்றும் அபிஷேகங்கள் ஊற்றப்படும் போது சராசரிக்கும் சற்று மேலான ஊட்டச்சத்தை பெறும். அவற்றை நாம் பிரசாதம் என்ற பெயரில் வாங்கி உட்கொள்ளும் போது அதன் ஊட்டச்சத்துக்கள் நமக்கும் கிடைக்கப்பெற்று உடலின் நோய் எதிர்ப்புசக்தி மேம்படுகிறது.
காகம் உண்ட பின் நாம் உண்ணும் வழக்கம்:
இந்திய கலாச்சாரத்தை பொருத்தவரை, காகத்திற்கு உணவு வைத்துவிட்டு அது உண்ட பின்பு தான் நாம் உணவருந்தத் தொடங்குவோம். இதற்கான அறிவியல் காரணம், நமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் மின்சாரம் என்பது உருவாக்கப்படவில்லை. மேலும் பெரும்பாலான வீடுகள் வெட்டவெளியாக தான் இருக்கும். எனவே, அதிகாலை நான்கைந்து மணிக்கெல்லாம் சமைக்கும் போது போதிய வெளிச்சம் இருக்காது. இதனால் ஏதேனும் விஷப்பூச்சிகள் அல்லது தேவையற்ற பொருட்கள் உணவில் கலந்து நஞ்சாக மாறிவிட வாய்ப்புள்ளது.
அதை உறுதிப்படுத்திக் கொள்ள தான் முதலில் காகத்திற்கு உணவு வைத்தனர். காகமானது எந்த உணவாக இருந்தாலும், அதை மறுக்காமல் உண்ணும் ஒரு பறவை என்பதை நீங்கள் அறிவீர்கள். காகத்திற்குப் பொதுவாக, உணவு உண்பதற்கு முன்பே அதில் நஞ்சு இருப்பதை உணரும் தன்மை உள்ளது. நஞ்சு கலந்திருக்கும் உணவை ஒருபோதும் காக்கை உண்ண மறுத்து விடும். இதன்மூலம் உணவில் நஞ்சு கலந்திருக்கிறதா என்பதை காக்கை மூலம் முன்னோர்கள் அறிந்து கொண்டனர். (Science behind Indian traditions).
இந்தப் பதிவின் மூலம் நமது முன்னோர்கள் எவ்வளவு சமயோஜித புத்தியுடன் செயல்பட்டுள்ளனர் என்பதை நாம் அனைவரும் உணர்ந்திருப்போம். மேலும் இது போன்ற சுவாரசியமான அறிவியல் உண்மைகளை இனிவரும் பதிவுகளில் கூறுகிறேன்.
உங்களுடைய பொன்னான நேரத்தை எனது பதிவிற்காக செலவிட்டதற்கு மிக்க நன்றி தோழர்களே! உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கருத்துப் பெட்டியில் பதிவிடுங்கள். பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்!
நன்றி!
கருத்துகள்
கருத்துரையிடுக