Ancient coins of India | சங்ககால இந்திய நாணயங்கள்
Ancient coins of India:
நாம் அனைவரும் நம் இந்திய நாட்டின் நாணயங்களான 25 பைசா, 50 பைசா, 10 பைசா, அதற்கும் சில வருடம் பின்னோக்கிச் சென்றால் ஓட்டை நாணயங்கள் போன்றவற்றை பற்றி நன்றாக அறிந்து இருப்போம்.
அதிலிருந்து மேலும் ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றால், நம்முடைய முப்பாட்டன்களான சேர சோழ பாண்டியன் பயன்படுத்திய தமிழக நாணயங்களைப் பற்றி அறிந்திருப்பது சற்றுக் குறைவுதான்.
எனவே இந்தப் பதிவில் கிமு 4ஆம் நூற்றாண்டில் இருந்து கிபி 1867ஆம் வரை நம் தமிழர்கள் பயன்படுத்திய ஒரு சில நாணயங்கள் பற்றிய தொகுப்பை சுருக்கமாக காணவிருக்கிறோம். வாருங்கள் காண்போம்!
தமிழக நாணயங்கள் அச்சிடப்பட்ட முறை:
கிபி 1800 ம் நூற்றாண்டு வரையில் தமிழ்நாட்டிற்கென தனி நாணயங்கள் புழக்கத்தில் இருந்தது. தமிழக நாணயங்களைப் பொறுத்தவரையில், அதன் வடிவமைப்பானது பெரும்பாலும் சதுரம் அல்லது சதுரம் சார்ந்த வடிவமைப்பிலேயே இருக்கும். நாணயத்தின் முன்பக்கம் எந்த அரசன் அந்த நாணயத்தை வெளியிட்டாரோ அவருடைய நாட்டின் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும்.
(எ-டு) : சோழ அரசருடைய நாணயத்தில் புலி சின்னமும், பாண்டிய அரசரது நாணயத்தில் மீன் சின்னமும், சேர அரசரின் நாணயத்தில் வில் அம்பு சின்னமும் பொறிக்கப்பட்டிருக்கும். அதுவே குறுநில மன்னர்கள் உருவாக்கும் நாணயங்களில் சுத்தில், கோடாரி, வேல் போன்ற சின்னங்கள் காணப்படும்.
சேரர் நாணயம் |
பாண்டியர் நாணயம் |
நாணயத்தின் பின்பக்கம் பெரும்பாலும் யானை சின்னங்களே பொறிக்கப்பட்டிருக்கும். ஒரு சில நாணயங்களில் யானைக்குப் பின் குதிரை நிற்பதுபோல, அல்லது யானை சண்டையிடுவது போன்ற சின்னங்கள் காணப்படும்.
புதிய சோழர் நாணயம் கண்டுபிடிப்பு:
கடந்த சில மாதங்களில், தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு நாணய விற்பனையாளரிடம் இருந்து சங்ககால சோழர் நாணயம் தொல்லியல் ஆய்வுக்காக கிடைக்கப் பெற்றது.
நான் முன்னரே கூறியது போல, அந்த நாணயத்தின் முன்பகுதியில் சோழர் சின்னமான புலி பொறிக்கப்பட்டு இருந்தது. அந்த நாணயத்தின் பின் பகுதியில் இதுவரை கிடைக்கப்பட்ட நாணயங்களில் இல்லாத ஒரு புதிய வடிவம் காணப்பட்டது.
அந்த வடிவத்தை பார்க்கும்போது யானைக்குப் பின்னால் ஒரு மனிதன் நின்று கொண்டு, கைகளைக் கூப்பி அந்த யானையை வணங்குவது போன்று உள்ளது. இதைப் பற்றித் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுவதாவது, சங்ககாலத்தில் கோவில் யானைகளை வணங்குவது என்பது அனைவராலும் கடைபிடிக்கப்பட்ட ஒரு வழக்கம்.
அதை சித்தரிக்கும் வகையில் இந்த நாணயம் உள்ளது. இந்த நாணயம் சங்ககாலச் சோழர்களின் பக்தியை குறிப்பதாகவும் இருக்கலாம். மேலும் அதைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
பட்டத்து யானையும் கோழியும்:
அதற்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு கீழடியில் நிகழ்ந்த அகழாய்வில் மற்றொரு சோழர் நாணயம் கிடைத்துள்ளது. அந்த நாணயத்தின் பின்பகுதியில் ஒரு யானையும், ஒரு கோழியும் சண்டையிடுவது போன்ற வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது.இந்த நாணயத்தின் மூலம் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுவதாவது, யானை சண்டையிடுவது போன்று உள்ள இந்த நாணயம் சங்ககாலச் சோழர்களின் படை பலத்தை குறிப்பதாக உள்ளது. மேலும் வரலாற்றில் எழுதப்பட்ட கதைக்கு ஒரு ஆதாரமாகவும் இந்த நாணயம் அமைந்துள்ளதாக கூறுகின்றனர். (Ancient coins of India)
முன்னரே, இதைப் போன்று பல நாணயங்கள் தமிழ்நாட்டின் கீழடி அகழாய்வின் மூலம் கிடைக்கப் பெற்றுள்ளது. அவற்றைப் பற்றி மற்றொரு பதிவில் மேலும் விரிவாக காணலாம்.
என்னுடைய இப்பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி தோழர்களே! மீண்டும் ஒரு சிறந்த பதிவுடன் உங்களை சந்திக்கிறேன். என்னுடைய பதிவை உங்கள் நண்பர்களுடன் தவறாமல் பகிருங்கள். அவர்களும் படித்துப் பயன் பெறட்டும்.
நன்றி!
கருத்துகள்
கருத்துரையிடுக