Science behind Indian traditions | இந்திய மரபுகளின் அறிவியல்(பாகம்-2)
Science behind Indian traditions: நான் என்னுடைய கடந்த பதிவில் , இந்திய கோவில்களுக்கு பின் ஒளிந்திருக்கும் மூன்று அறிவியல் இரகசியங்கள் பற்றி எழுதியிருந்தேன். ஆனால் அது மூன்றில் அடங்கும் அளவிற்கு சிறிதல்ல. நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அறிவியல் ரகசியங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் ஒரு சிலவற்றை தொகுத்து இரண்டாம் பாகமாக இந்தப் பதிவில் எழுதியுள்ளேன். படித்துப் நன்கு பயன்பெறுங்கள். கோவில்கள் கட்டப்பட்ட முறை: இந்திய கோவில்களின் கட்டமைப்பை பொருத்தமட்டில், அடித்தளத்திலிருந்து மேலே செல்லும் போது ஒருவிதமான காற்றியக்கவியல் (aerodynamic) சார்ந்த அமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும். மேலும் அந்த கோபுரத்தின் உச்சியில் பல கலசங்களும் பொருத்தப்பட்டிருக்கும். இவ்வாறு உருவாக்கப்பட்டதற்கான முக்கியக் காரணம், பிரபஞ்சத்தின் மிக சக்திவாய்ந்த காற்றலைகளை எளிதில் தன்வசம் இழுத்து விடக்கூடிய தன்மை அந்த கோபுரத்தின் அமைப்பு மற்றும் கலசங்களுக்கு உள்ளது. அந்த கோபுரத்தின் கலசங்களுக்குள் நெல் , அரிசி மற்றும் வரகு போன்ற பாரம்பரிய நெல் வகைகள் இருப்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணம். நெல், இயற்கையாகவே சற்று காந்