இந்திய புராணம் கூறும் புற்றுநோய்க்கான மருந்து
நான் பதிவிட்ட கடந்த சில பதிவுகள் ஒன்றில் இந்திய புராணங்கள் கூறும் அறிவியலைப் பற்றிக் கூறியிருந்தேன். அதில் அனுமன் சாலிசா மற்றும் பரிணாம வளர்ச்சி ஆகிய இரண்டின் அறிவியல் விளக்கங்களையும் நாம் பார்த்தோம். அதே போல இந்தப் பதிவிலும் நாம் ஒரு சுவாரசியம் ஊட்டும் புராண அறிவியல் கூற்று ஒன்றினைப் பற்றி தெளிவாகக் காணவிருக்கிறோம். வாருங்கள் காண்போம்!
தேவி மகாத்மியம்:
தேவி மகாத்மியம் என்பது ஒரு பழங்கால புராணக் கதைகளைக் கூறும் புத்தகமாகும். இந்தப் புத்தகத்தில் மிகக் கொடிய புற்று நோயைக் (Cancer) குணப்படுத்துவதற்கான மருந்து பற்றிக் கதை வாயிலாகக் கூறியுள்ளனர். அந்தப் புராண காலத்தில், ரக்தபீஜன் என்னும் ஒரு கொடிய அரக்கன் இருந்தான். அவனது மிகப்பெரிய பலமே, எத்தனை முறை அவனைக் கொன்றாலும் மீண்டும் அவனுடைய ஒரு சொட்டு இரத்தத்திலிருந்து அவன் உயிர் பெற்று எழுவான். இதனால் மக்கள் அனைவரும் என்ன செய்வதென்று அறியாமல், அம்மன் தெய்வத்தின் உதவியை நாடியுள்ளனர்.
எத்தனை முறை அம்மன் அவனை அளித்தாலும், மீண்டும் அவனது ஒரு சொட்டு இரத்தத்தில் இருந்து உயிர்த்தெழுந்து விட்டான். இதனால் அம்மன், காளி தெய்வத்தின் உதவியை நாடியுள்ளார். அப்போது அம்மன் அவனை தன்னுடைய சக்தியை கொண்டு அளித்தவுடன், காளி ரக்தபீஜன் உடைய முழு ரத்தத்தையும் குடித்துவிட்டார். அவனுடைய மிகப்பெரிய பலத்தையே அவன் இழந்ததால், அரக்கனால் மீண்டும் உயிர்பெற இயலவில்லை.
அறிவியல் விளக்கம்:
இதில் என்ன அறிவியல் இருக்கிறது என்று அனைவரும் சிந்திக்கலாம். ஏன் நானும் சற்று யோசித்தேன். இதைப்பற்றி மேலும் படித்த போதுதான் அதற்கான விளக்கம் கிடைத்தது. அதாவது இந்தக் கதையில் அம்மன் தெய்வத்தை நாம் அன்றாடம் உபயோகிக்கும் மஞ்சளுடன் ஒப்பிட்டுள்ளனர். பொதுவாக நாம் அம்மனுக்கு ஏதாவது திருவிழா நடத்தினால் அதில் மஞ்சள், மற்றும் மஞ்சள் சார்ந்த அபிஷேகங்கள் ஒரு முக்கிய பங்கை வகிக்கும்.அம்மனை மஞ்சளுடன் ஒப்பிட்டது போல, காளி தெய்வத்தை மிளகுடன் ஒப்பிட்டுள்ளனர். மேலும், காளி தெய்வத்தை சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தைக் கொண்டு குறிப்பிடுவர். ரக்தபீஜன் என்னும் அரக்கனை, எத்தனை முறை அழித்தாலும் மீண்டும் உயிர்த்தெழும் கான்சர் செல்களுடன் ஒப்பிட்டுள்ளனர். எனவே இந்த கொடிய அரக்கனான புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்து, மஞ்சள் மற்றும் மிளகு தான் என்பதை இந்தப் புராணத்தில் கதை வாயிலாகக் கூறியுள்ளனர்.
இதை நாம் அறிவியல் ரீதியாக பார்த்தால் கூட நாம் அன்றாடம் உபயோகிக்கும் மஞ்சள் தூளில் உள்ள குர்குமின் (curcumin) என்னும் ரசாயனமும் மிளகுத்தூளில் உள்ள பைப்பரின் (piperine) என்கின்ற ரசாயனமும் புற்று நோயைக் குணப்படுத்துவதற்கு மிகவும் உதவுகிறது என்று 2009 ஆம் ஆண்டின் ஆய்வு கூற்றின் படி நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தக் கதையில் அம்மன் மற்றும் காளி சேர்ந்து அந்த அரக்கனை அழித்தது போலவே, மஞ்சள் மற்றும் மிளகு ஆகிய இரண்டும் சேர்ந்தால்தான் அதன் வீரியம் அதிகரிக்கும். புற்று நோய்க்கும் அது சிறந்த மருந்தாக அமையும்.
இதன் மூலம் நம் முன்னோர்கள் நோயை குணப்படுத்துவதற்கான குறிப்பையும் அன்றே கதை வாயிலாக கூறிச் சென்றுள்ளது மிகவும் வியப்பை அளிக்கிறது. என்னுடைய இந்திய புராணம் பற்றிய மற்றொரு பதிவை நீங்கள் காண விரும்பினால் இந்த சுட்டியை பயன்படுத்தி கொள்ளுங்கள்👇
https://diviyathamizh.blogspot.com/2020/09/blog-post.html
என்னுடைய இப்பதிவைப் படித்தமைக்கு மிக்க நன்றி தோழர்களே! மீண்டும் ஒரு சிறந்த பதிவுடன் உங்களை சந்திக்கிறேன். உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கருத்துப் பெட்டியில் பதிவிடுங்கள். என்னுடைய பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.
நன்றி!
Good work super 👏👏👍
பதிலளிநீக்கு