reasons why you should read a book | புத்தகங்கள் ஏன் படிக்கவேண்டும்?
Reasons why you should read a book:
நான் என்னுடைய புத்தகம் பற்றிய கடந்த பதிவுகளில்,
என்ற மூன்று கேள்விகளுக்கும் விடையளிக்கும் வகையில் என்னுடைய பதிவுகளை எழுதியிருந்தேன். அதுபோல, இந்தப் பதிவில் புத்தகங்கள் ஏன் படிக்கவேண்டும்? என்பதற்கான இரண்டு முக்கிய காரணங்கள் பற்றிக் காணவிருக்கிறோம். வாருங்கள் காண்போம்!
உங்கள் படைப்பாற்றலை மேம்படுத்தும்:
ஒரு புத்தகத்தை நாம் படிக்கும்போது, அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைப் பற்றி நாம் இயல்பாக சிந்திக்கத் தொடங்குவோம். இந்த வரியின் கருத்துக்கள் சரியானதா? நடைமுறைக்கு ஏற்றதா? என்று பல கேள்விகள் உங்களில் எழத் தொடங்கும். புத்தகத்தின் ஆசிரியர் கூறியுள்ள கருத்துக்களை நீங்கள் புரிந்து கொள்ள முற்படும் போது உங்களின் படைப்பாற்றல் திறன் (Creativity) இயல்பாக அதிகரிக்கும். எதையும் குறுகிய வட்டத்தில் சிந்திக்காமல் அனைத்து கோணங்களிலும் உங்கள் மூளை சிந்திக்கத் தொடங்கி விடும்.
இதை நான் பிறரிடம் பேசி தெரிந்து கொண்டாலே அது எனக்கு பயனளிக்குமே? என்ற கேள்வி உங்களுள் எழும். நீங்கள் பிறரிடம் பேசும்போது உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை அந்த நொடியே அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வீர்கள். அதுவே எழுத்து வடிவில் உள்ள ஒரு புத்தகத்தை நீங்கள் படிக்கும்போது, உங்களது மனதுடன் மட்டுமே உரையாட முடியும்.
ஏன், நானும் தற்போது உங்களுடன் எழுத்து வடிவில் தான் உரையாடிக் கொண்டிருக்கிறேன். இப்போது உங்களுக்குள் எழும் கேள்விகளை இந்த நொடியே என்னிடம் நீங்கள் கேட்க முடியுமா? அது இயலாத ஒன்று தான். உங்கள் கேள்விக்கான விடையை நீங்களே தேடத் தொடங்குவீர்கள். அங்குதான் உங்கள் மனம் மேம்பட்ட சிந்தனைத் திறனை பெறுகிறது. (reasons why you should read a book)
உங்களை பொறுமைசாலியாக மாற்றும்:
பொதுவாக ஒருவரிடம் சென்று, உனக்கு புத்தகம் படிக்கப் பிடிக்குமா? என்று கேள்வி எழுப்பினால், "அந்த அளவுக்கு எனக்குப் பொறுமையில்லை சாமி!" என்றுதான் பெரும்பாலானவர்கள் கூறுவார்கள். இதற்கான காரணம், ஒரு புத்தகத்தை நீங்கள் படிக்க ஓரிடத்தில் அரை மணி நேரம் அமைதியாக உட்கார்ந்து, புத்தகத்தின் மீது கவனம் செலுத்தியாக வேண்டும். அப்போதுதான் அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் உங்கள் மனதில் ஆழமாகப் பதியும். எதுவும் பேசாமல் ஓரிடத்தில் ஒரு மணிநேரம் உட்காரும் அளவிற்கு பொறுமை வந்துவிட்டாலே அது நமக்கு மிகப்பெரிய சாதனைதான்!
அன்றாடம் இவ்வாறு செய்யும் போது உங்களது பொறுமை நிச்சயம் சோதிக்கப்படும். நாட்கள் செல்ல செல்ல நீங்களே உங்கள் பொறுமையை வளர்த்துக் கொள்ளத் தொடங்குவீர்கள். இது உங்களுக்கு புத்தகம் படிப்பதற்கு உதவுவது தவிர, மற்ற வாழ்வியல் சூழல்களிலும் நிச்சயம் உதவும். மேலும் உங்களது கவனம் மற்றும் செறிவுத்திறன் (concentration) வளரத் தொடங்கும். நம்பிக்கை இருந்தால் செய்து பாருங்கள்! நீங்கள் பொறுமைசாலிதானா? என்று நீங்களே தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு இது.
இந்தப் பதிவில் நாம் புத்தகங்கள் ஏன் படிக்கவேண்டும்? என்பதற்கான விடையை தெரிந்து கொண்டோம். இதுபோல அடுத்து எந்தப் பதிவை நான் எழுத வேண்டும் என்று கீழே கருத்துரையிடுக.
என்னுடைய பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி தோழர்களே! மீண்டும் ஒரு சிறந்த பதிவுடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன்! இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.
நன்றி!
Super da good work
பதிலளிநீக்குThank you so much 😃🙏
நீக்குTry to post history and ethics related and.. informative related...topics more. You're really good in that bro.. keep it ... Keep going bro🤩
பதிலளிநீக்குThanks for your appreciation 🙏🤩. Sure I will write about ethics💯
நீக்குSuper work da
பதிலளிநீக்குThank you😃
நீக்கு