சிதம்பர நடராஜர் கோவில் இரகசியம்

   இந்த பூலோகம் செயல்பட காரணமாக இருப்பது  நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதாவது நீர் உருவாகக் காரணமாக நிலமும், நெருப்பு உருவாகக் காரணமாக காற்றும், காற்று உருவாகக் காரணமான ஆகாயமும் இருக்கிறது. இவற்றில் ஆகாயம் மட்டும் மற்ற பூதங்களின் சார்பின்றி இருக்கிறது. அதன்பின் ஒளிந்துள்ள ரகசியத்தையே இந்த பதிவில் நாம் காணவிருக்கிறோம். வாருங்கள் காண்போம்!


கோவில் அமைந்துள்ள இடம்:

    அப்படி என்ன சிதம்பர ரகசியம் என்று நீங்கள் சிந்திக்கலாம்!  நான் கூறப்போவதே அந்த சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய ரகசியம் தான். ஆம் நண்பர்களே! அந்தக் கோவிலுக்கென பல சிறப்பம்சங்கள் உள்ளன. அவற்றுள் மிக முக்கியமான ஒரு அம்சமே அந்தக் கோவில் அமைந்துள்ள இடம். அதாவது, உலக காந்த ஈர்ப்பு விசையின் மையப் பகுதியில் தான் சிதம்பர நடராஜர் கோவில் அமைந்துள்ளது. அதன் காரணமாக, இந்தக் கோவிலுக்கு மேலே பறக்கும் எந்த ஒரு செயற்கைக் கோள்களும் செயலிழந்து போவதாக வானியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

    மேலும் இந்தக் கோவிலில் மூன்று வகையான வழிபாடுகள் அரங்கேறி வருகின்றன. அந்த மூன்று  வழிபாடுகளும் இந்த கோவிலின் ஒரு ரகசியமாக கருதப்படுகிறது. அவை மூன்றும் உருவ வழிபாடு, அருஉருவ வழிபாடு, அருவ வழிபாடு என மூன்று வகைகளாக உள்ளது . உருவ வழிபாடாக நடராஜர் சிலையையும், அருவுருவ வழிபாடாக சிவலிங்கத்தையும், அருவ வழிபாடாக ஆகாயத்தையும் வழிபாடு செய்து வருகின்றனர்.


பஞ்சபூத சிவ ஸ்தலங்கள்:

இவ்வுலகில் பஞ்சபூத சிவ ஸ்தலங்கள் எனப் போற்றப்படும் ஸ்ரீ காளஹஸ்தி, காஞ்சிபுரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய ஐந்து சிவ ஸ்தலங்களும் புவியியல் நிலையின் படி சரியாக ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கிறது என்னும் உண்மையை நீங்கள் அறிவீர்களா? இல்லையெனில் இந்தப் பதிவின் மூலம் நன்கு அறிந்து கொள்ளுங்கள். ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்பு, எந்த ஒரு விஞ்ஞான வளர்ச்சியும் இல்லாத காலகட்டத்தில் எவ்வாறு இப்படி சிந்தித்தார்கள் என்னும் கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.




கோவிலின் அமைப்பு:

மேலும் சிதம்பர நடராஜர் கோவில் மனித உடல் அமைப்பின் படி தான் அமைந்திருக்கிறது என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நம் மனித உடலில் மொத்தம் 9 துவாரங்கள் இருப்பது போன்றே, இந்தக் கோவிலிலும் ஒன்பது வாசல்கள் அமைந்துள்ளது. மனித உடலின் இடபாகத்தில் எவ்வாறு இதயம் அமைந்திருக்கிறதோ அதுபோல, இந்தக் கோவில் கருவறையின் இடப் பக்கத்திலேயே நடராஜர் சிலையும் அமைந்துள்ளது.


  கோவில் கருவறையின் மேல் பாகத்தில் மொத்தம் 21,600 தங்க ஓடுகள் மற்றும் 65 ஆயிரம் தங்க ஆணிகள் அமைந்திருக்கின்றன. இந்த 21,600 என்ற கணக்கு மனிதன் சராசரியாக, ஒரு நாளில் விடும் மூச்சுக்காற்றின் எண்ணிக்கையை குறிக்கிறது. 65 ஆயிரம் ஆணிகள் என்பது மனித உடலில் அமைந்துள்ள மொத்த நாடிகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.

  எல்லாம் சரி, ஏன் இந்தக் கோவில் மனித உடல் அமைப்பில் கட்டப்பட்டது? என்ற கேள்வி உங்கள் அனைவரின் மனதிலும் நிச்சயமாக எழும். அதற்கான பதில், ஆகாயம் என்பது நம் மனித உடலில்தான் அமைந்துள்ளது என்பதே ஆகும். இதையே ஆங்கிலத்தில் "aura" என்று கூறுவர். நம் மனித உடலில் அமைந்துள்ள இந்த இதய ஆகாயத்தில் தான் மூச்சுக் காற்றாக நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடி வருகிறார். இந்த உண்மையை உணர்ந்ததால் தான், சுவிட்சர்லாந்தின் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையத்தில் பிரபஞ்சத்தின் குறியீடாக நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது.


   எனது இப்பதிவைப் படித்தமைக்கு மிக்க நன்றி தோழர்களே! உங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை கீழே உள்ள கருத்து பெட்டியில் பதிவிடவும். மீண்டும் ஒரு சிறந்த பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்.

                                      நன்றி!



கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மார்க்கோபோலோவின் தமிழ்ப் பயணக் குறிப்புகள்

reasons why you should read a book | புத்தகங்கள் ஏன் படிக்கவேண்டும்?