raji an ancient epic review | ராஜி ஒரு பண்டைய காவியம்
Raji an ancient epic review: பொதுவாக, நம்முடைய இந்திய புராணங்கள் மற்றும் அதனுடைய சிறப்புகள் போன்றவற்றை நாம் புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொள்வதே வழக்கம். தற்போதைய தொழில்நுட்ப காலத்தில் புத்தகம் பரிணாம வளர்ச்சி அடைந்து, சமூக வலைதளங்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் நமக்கு புராணங்களை கற்பிக்கிறது. எனவே, இந்தப் பதிவில் நம்முடைய இந்திய புராணக் கதைகளை சித்தரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள "ராஜி" என்று பெயர் பெற்றிருக்கும் ஆன்லைன் விளையாட்டு ஒன்றை பற்றிக் காணவிருக்கிறோம். வாருங்கள் காண்போம்! ராஜி ஒரு பண்டைய காவியம்: (raji an ancient epic) ராஜி எனப்படும் இந்த ஆன்லைன் விளையாட்டு அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 15, 2020 ஆம் தேதி பிரபல நிறுவனமான மைக்ரோசாப்ட் விண்டோஸ் தளத்தின் மூலம் வெளியிடப்பட்டது. 13 பேர் கொண்ட குழுவை வைத்து நாடிங் ஹெட்ஸ் கேம்ஸ் ( Nodding heads games) எனப்படும் மகாராஷ்டிராவில் அமைந்துள்ள நிறுவனம் இந்த ஆன்லைன் விளையாட்டை தயாரித்துள்ளது. இந்த ஆன்லைன் விளையாட்டானது மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்திய புரா