புத்தகத்தின் மூலம் பயனடைவது எப்படி? பாகம்-2
புத்தகம் என்பது நம் வாழ்வை மேம்படுத்த உதவும் ஒரு சிறந்த கருவியாகும் . அதை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம். அதற்கான ஒரு சிறந்த பதிவாக இது அமையும் என்று நான் நம்புகிறேன். இந்தப் பதிவில் நாம் புத்தகத்தின் மூலம் பயனடைவது எப்படி? என்பதையும், புத்தகத்தின் கருத்துக்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றியும் காணவிருக்கிறோம். வாருங்கள் காண்போம்! கருத்துக்களை அடிக்கோடிடுங்கள்: நீங்கள் ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது அந்தப் புத்தகத்தின் சிறப்பான மற்றும் மறக்கக்கூடாத கருத்துக்களையோ அல்லது வரிகளையோ அடிக்கோடிட கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கான காரணம், ஒரு புத்தகத்தை முழுமையாக படித்த பின்பு, ஏதேனும் ஒரு சூழலில் நீங்கள் அந்தப் புத்தகத்தில் கற்றுக் கொண்ட விஷயங்களை நினைவுகூற முற்படுவீர்கள். அந்த சமயத்தில் மீண்டும் அந்த புத்தகத்தை புரட்டும்போது, நீங்கள் அடிக்கோடிட்ட அந்த வரிகள் மொத்த கருத்துக்களையும் எளிதில் உங்களுக்கு நினைவூட்டி விடும். உங்களுக்கு எந்த கருத்துக்கள் மிகவும் முக்கியம் எனத் தோன்றுகிறதோ அவற்றை மட்டுமே அடிக்கோடு இடுங்கள். படித்தவற்றை செயல்படுத்துங்கள