இந்திய புராணங்கள் கூறும் நவீன அறிவியல்
1) பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம்:
1653 ஆம் ஆண்டில் கிரிஸ்டியன் ஹ்யூஜன்ஸ் என்னும் வானியலாளர் சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான சராசரி தூரத்தை 149 மில்லியன் கிலோமீட்டர் என்று கண்டுபிடித்தார். பூமி சூரியனை நீள்வட்ட வடிவில் சுற்றுவதால் இரண்டிற்கும் இடையேயான தூரமானது ஒரே அளவாக இல்லாமல் தொலைதூரம், குறுகியதூரம் என்று மாறுபட்டுக் கொண்டே இருக்கும் என்பதை, நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இப்போது நாம், துளசிதாசர் 1653 ஆம் ஆண்டுக்கு முன்பே எழுதிய "அனுமன் சாலிசா" என்னும் புத்தகத்திற்கு வருவோம். இந்தப் புத்தகம் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டதாகும். இதில் எழுதப்பட்டுள்ள செய்யுளின் பதினெட்டாம் வரியை தற்போது காணலாம்.
யுக ஸஹஸ்த்ர யோஜன் பர பாநூ/ லீலையோ தாஹி மதுர பல ஜாநூ//
இந்த வரியின் மேலோட்டமான அர்த்தம் என்னவென்றால், அனுமனே! ஒரு யுக ஸஹஸ்த்ர யோஜனம் கடந்து இருக்கின்ற "சூரியனை", நீ மாம்பழம் எனக்கருதி, அதையும் பறித்து உண்ணச் சென்றாயே! என்று துளசிதாசர் அனுமனைப் பற்றிக் கூறியுள்ளார். இந்த வரியில் உள்ள ஒரு சில சமஸ்கிருத வார்த்தைகளுக்கான அர்த்தங்களை நாம் கூர்ந்து கவனித்தால் அதிலிருந்து நமக்கு ஒரு கணக்கு விடை கிடைக்கிறது. அதாவது,
"1 யுகம் = 12000 வருடங்கள்
1 ஸஹஸ்த்ரம் = 1000
1 யோஜன் = 8 மைல்கள்"
இந்தக் கணக்கை விளக்கும் வகையில் உள்ள, ஒரு தெளிவான படத்தை இப்போது பார்க்கலாம்.
இந்தப் படத்தில் கிடைத்திருக்கும் 1536000000 மில்லியன் கிலோமீட்டர் என்னும் விடையின் சுற்று மதிப்பு (round off value) 152,000,000 என்பதாகும். நான் முன்னரே கூறியது போல, பூமி சூரியனிலிருந்து தொலை தூரத்தில் (farthest distance) இருக்கும் போது, இரண்டுக்கும் இடையிலான தூரம் 152,000,000 மில்லியன் கிலோமீட்டர் என்பதாகும். அதுவே பூமி சூரியனிலிருந்து குறுகிய தூரத்தில் (shortest distance) இருந்தால் இரண்டிற்கும் இடையிலான தூரம் 146,000,000 மில்லியன் கிலோமீட்டர் என்பதாகும்.
எனவே துளசிதாசர் அவருடைய புத்தகமான அனுமன் சாலிசத்தில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான தொலை தூரத்தையே (farthest distance) குறிப்பிட்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஹ்யூஜன்ஸ் இதைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே, துளசிதாசர் அவர் எழுதிய புத்தகத்தில் இரண்டு வரி செய்யுளின் மூலம் எளிமையாக குறிப்பிட்டுள்ளார் என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது!
2) பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு:
1858ஆம் ஆண்டு சார்லஸ் டார்வின் என்பவர் மனித பரிணாம கோட்பாட்டை கண்டுபிடித்து இவ்வுலகிற்கு அறிமுகம் செய்தார். அதில் அவர், "நீர்" தான் முதலில் தோன்றியது. அதன் பிறகு நீரில், சிறிது சிறிதாக நுண்ணுயிரிகள் வளரத் தொடங்கி, பின்பு நீந்தும் உயிரினமான சிறுசிறு மீன்களாக மாறி, காலப்போக்கில் ஊர்வன, பறப்பன, நடப்பன என்று பரிணாம வளர்ச்சி அடைந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்போது நாம் விஷ்ணுவின் பத்து அவதாரங்களைப் பற்றிக் கூறும் "விஷ்ணு புராணம்" என்னும் புத்தகத்தை எடுத்துக் கொள்வோம். இந்தப் புத்தகத்தில் விஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களாகிய மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராஹ அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமண அவதாரம், பரசுராம அவதாரம், இராம அவதாரம், ஸ்ரீ கிருஷ்ண அவதாரம், பலராம அவதாரம், கல்கி அவதாரம் ஆகிய பத்து அவதாரங்கள் பற்றியும், அந்த அவதாரங்களை எதற்காக எடுத்தார் என்ற தெளிவான விளக்கமும் கூறப்பட்டிருக்கிறது.
இதில் முதல் அவதாரமான மச்சாவதாரத்தில் அவர் ஒரு "மீன்" வடிவில் அவதாரம் எடுத்திருக்கிறார். மச்சம் என்றால் மீன் என்பது பொருள். இரண்டாவது அவதாரமான கூர்ம அவதாரத்தில் அவர் "ஆமை" வடிவில் உருவெடுத்திருக்கிறார். கூர்மம் என்றால் ஆமை என்று பொருள்.
எனவே டார்வினின் கோட்பாட்டில் குறிப்பிட்டது போல இந்தப் புத்தகத்திலும் நீந்தும் உயிரினமான, "மீன்" தான் முதலில் தோன்றியதாக கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக, தவழ்ந்து செல்லும் உயிரினமான ஆமை அவதாரத்தில் பெருமாள் உருவெடுத்து, அதன் பின் நடக்கும் உயிரினமான பன்றி அவதாரத்திலும் உருவெடுத்துள்ளார்.
இதன் மூலம் டார்வினின் கோட்பாடு உருவாவதற்கு முன்பே நம்முடைய விஷ்ணு புராணத்தில் பரிணாம வளர்ச்சியைப் பற்றி நம் முன்னோர்கள் கூறியுள்ளனர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
எனது இப்பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி தோழர்களே! மீண்டும் ஒரு சிறந்த பதிவுடன் உங்களை சந்திக்கிறேன். என்னுடைய பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்! மேலும் எனது பதிவு பற்றிய உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கருத்துப் பெட்டியில் பதிவிடுங்கள்.
நன்றி!
இரண்டே வரியில் மிகப்பெரிய அறிவியலை கூறியுள்ளார். படிக்கவே வியப்பாக உள்ளது தோழரே! அருமையான பதிவு.!!!!✌️✌️✌️
பதிலளிநீக்குஉங்களுடைய வெளிப்படையான கருத்துக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்♥️🙏
நீக்குSuper and surprising
பதிலளிநீக்குநன்றி தோழா🙏
நீக்குUnbelievable. .. Keep up the good work and share more useful thoughts like this ...
பதிலளிநீக்குSure bro🙏😊
நீக்குமிகவும் அழகாக கூறியுள்ளீர்கள் தோழரே ...
பதிலளிநீக்குநன்றி நண்பா🙏
நீக்கு