இந்தியாவின் வியக்க வைக்கும் கோவில்கள்

   நம் இந்திய நாட்டில், பல மர்மம் நிறைந்த இடங்கள் மற்றும் கோவில்கள் வெவ்வேறு மாநிலங்களில் அமைந்துள்ளன. இவற்றை ஏன் மர்மம் நிறைந்தவை என்று குறிப்பிடுகிறேன் என்றால், அதற்கு இன்னும் அறிவியல் ரீதியான நிரூபணங்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவற்றுள், சில மர்மம் நிறைந்த கோவில்கள் மற்றும் இடங்கள் பற்றியே இந்தப் பதிவில் நாம் காணவிருக்கிறோம்.  வாருங்கள் காண்போம்!

வீரபத்திரா கோவில்:(ஆந்திர மாநிலம்)

  ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் அமைந்துள்ள இந்தக் கோவில் கி.பி 530 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தக் கோவிலில் சுமார் 70 தூண்கள் அமைந்துள்ளன. அந்த எழுபது தூண்களில் ஒரு தூண் மட்டும், இந்நாள் வரை தரையைத் தொடாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. 

 சுமார் 70 அடி உயரம் உள்ள இந்தத் தூண் எவற்றின் உதவியுமின்றி எவ்வாறு அந்தரத்தில் நிற்கிறது என்பது மர்மமாகவே உள்ளது. 1910 ஆம் ஆண்டில், இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் இந்தத் தூணின் நான்கு முனைகளில், ஒரு முனையை மட்டும் தரையுடன் இணைத்து விட்டார். ஆனால் இந்தத் தூணின் மேற்புறம் இதனால் பாதிக்கப்பட்டதால், மீதமுள்ள மூன்று முனைகளை இணைக்காமல் இந்த முயற்சியை அவர் பாதியிலேயே கைவிட்டுவிட்டார். இந்தக் கோவிலுக்கு வரும் மக்கள் இந்தத் தூணின் அடியில் துணியை வைத்து வேண்டினால், வேண்டியது நிறைவேறும் என்று நம்புகின்றனர்.

பத்மநாபசாமி கோவில்: (கேரள மாநிலம்)

  கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள இந்தக் கோவில்தான் உலகின் "பணக்கார கோவில்" என்று கூறுகின்றனர். இந்தக் கோவிலின் மர்மம் பற்றி நீங்கள் முன்னரே அறிந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், இந்தக் கோவிலின் மர்மங்கள் உலக அளவில் பலரால் தற்போதும் பேசப்பட்டு வருகிறது. இந்தக் கோவிலில் மொத்தம் எட்டு பாதாள அறைகள் அமைந்துள்ளன. அவற்றுள் ஐந்து அறைகள் மட்டுமே இன்றுவரை திறக்கப்பட்டுள்ளன. கடந்த 2011ம் ஆண்டு ஆறாவது பாதாள அறை திறக்கப்பட்ட நிலையில், ஒரு ஆச்சரியமூட்டும் நிகழ்வு நிகழ்ந்தது. அந்த அறையினுள் ஏராளமான புதையல்கள் கிடைக்கப்பெற்றன. தங்கத்தாலான யானை சிலைகள், நகைகள் மற்றும் 500 கிலோ எடை கொண்ட வைர அணிகலன்கள் கிடைக்கப் பெற்றன. 

  அந்தப் புதையல்களின் மொத்த மதிப்பு சுமார் ஒரு லட்சத்து 46 ஆயிரம் கோடி என்பது தெரியவந்தது. இந்த புதையல்களை அறையிலிருந்து வெளியே எடுத்து வர மொத்தம் 12 நாட்கள் ஆனது என்று கூறுகின்றனர். மேலும், ஏழாவது கதவு இரும்பால் ஆனது என்பதால் இந்நாள் வரை திறக்கப்படாத நிலையில் உள்ளது. அந்த அறையினுள் என்ன மர்மம் நிறைந்திருக்கிறது என்பதை கண்டறிய பலரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

வான் இரைக் கல்: (தமிழகம்) 

   கிருஷ்ணரின் வெண்ணை உருண்டை அல்லது பீமன் பாறை என்ற பெயர்களால் அழைக்கப்படும் இந்தக் கல், சென்னை மாவட்டம், மகாபலிபுரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பாறையானது, 20 அடி உயரமும், 5 மீட்டர் அகலமும் கொண்டதாகும். இந்தப் பாறையானது 1200 வருடங்கள் பழமையானது என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், இந்தப் பாறையின் எடை சுமார் 250 டன் ஆகும். ஒரு செங்குத்தான பாதையில் புவியீர்ப்பு விசைக்கே சவால் விடும் விதமாக, அதை எதிர்த்து எவ்வாறு இந்தப் பாறை சரியாமல் நிற்கிறது என்பது மர்மமாகவே உள்ளது. பலரும் இதற்கு அறிவியல் விளக்கங்கள் கொடுத்தாலும், இதுவரை எந்த விளக்கமும் முழுமையாக ஏற்கப்படும் வகையில் அமையவில்லை.

  மேலும், இந்தப் பாறை சரிந்து விழுந்தால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்பதால் 1908ஆம் ஆண்டு மெட்ராஸ் கவர்னர் ஏழு யானைகளைக் கொண்டு இந்தப் பாறையை மேல் நோக்கி இழுக்க உத்தரவிட்டிருந்தார். ஆனால் எவ்வளவு முயற்சித்தும் ஏழு யானைகளைக் கொண்டு அந்தப் பாறையை ஒரு துளி கூட நகர்த்த முடியவில்லை என்பதே வியப்பூட்டும் வகையில் உள்ளது. 

 மேலும் இந்தக் கல்லின் ஒரு பகுதி நன்றாக வெட்டப்பட்டது போன்ற ஒரு வடிவில் உள்ளது. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்த விஞ்ஞான வளர்ச்சிக்கு எவ்வாறு இந்தக் கல்லை வெட்டி இருக்க முடியும் என்ற கேள்வியும் எழுகிறது?


 எனது இப்பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி தோழர்களே! மேலும், இதைப்போன்ற தொன்மை நிறைந்த  தமிழ்ப் பதிவுடன் மீண்டும் உங்களைச் சந்திக்கிறேன். 

                                     நன்றி!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மார்க்கோபோலோவின் தமிழ்ப் பயணக் குறிப்புகள்

reasons why you should read a book | புத்தகங்கள் ஏன் படிக்கவேண்டும்?

சிதம்பர நடராஜர் கோவில் இரகசியம்