இடுகைகள்

இந்தியாவின் வியக்க வைக்கும் கோவில்கள்

படம்
   நம் இந்திய நாட்டில், பல மர்மம் நிறைந்த இடங்கள் மற்றும் கோவில்கள் வெவ்வேறு மாநிலங்களில் அமைந்துள்ளன. இவற்றை ஏன் மர்மம் நிறைந்தவை என்று குறிப்பிடுகிறேன் என்றால், அதற்கு இன்னும் அறிவியல் ரீதியான நிரூபணங்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவற்றுள், சில மர்மம் நிறைந்த கோவில்கள் மற்றும் இடங்கள் பற்றியே இந்தப் பதிவில் நாம் காணவிருக்கிறோம்.  வாருங்கள் காண்போம்! வீரபத்திரா கோவில்:(ஆந்திர மாநிலம்)   ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் அமைந்துள்ள இந்தக் கோவில் கி.பி 530 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தக் கோவிலில் சுமார் 70 தூண்கள் அமைந்துள்ளன. அந்த எழுபது தூண்களில் ஒரு தூண் மட்டும், இந்நாள் வரை தரையைத் தொடாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.   சுமார் 70 அடி உயரம் உள்ள இந்தத் தூண் எவற்றின் உதவியுமின்றி எவ்வாறு அந்தரத்தில் நிற்கிறது என்பது மர்மமாகவே உள்ளது. 1910 ஆம் ஆண்டில்,  இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் இந்தத் தூணின் நான்கு முனைகளில், ஒரு முனையை மட்டும் தரையுடன் இணைத்து விட்டார். ஆனால் இந்தத் தூணின் மேற்புறம் இதனால் பாதிக்கப்பட்டதால், மீதமுள்ள மூன்று முனைகளை இணைக்காமல் இந்த முய

"48 அதிகார விதிகள்" பாகம்-3

படம்
  நான் என்னுடைய கடந்த சில பதிவுகளில், "ராபர்ட் கிரீன்" எழுதிய " 48 அதிகார விதிகள்" என்னும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள 48 விதிகளில் 6 விதிகளை , இரண்டுப் பதிவுகளாகப் பிரித்துப் பதிவிட்டிருந்தேன். அந்த இரண்டு பதிவுகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே, இந்தப் பதிவில் மேலும் சிறந்த விதிகள் மூன்றனைப் பதிவு செய்துள்ளேன். அந்த மூன்று விதிகளைப் பற்றி இந்தப் பதிவில் காண ஆர்வமாக உள்ளீர்களா?? உங்கள் ஆர்வத்தை இந்தப் பதிவு நிச்சயமாக பூர்த்தி செய்யும். வாருங்கள் பதிவினுள்ளே செல்வோம்! மேய்ப்பவரை அடித்தால் மந்தை கலையும்:   நம் வாழ்வில் பல தருணங்களில், நபர்கள் ஒரு கூட்டமாக ஒருங்கிணைந்து நம்மை வீழ்த்த முயற்சிப்பது உண்டு. அதுபோன்ற சமயங்களில் நாம் நம்மை காத்துக்  கொள்வதற்காக, அந்தக்  கூட்டத்தையே வீழ்த்த வேண்டும் என்று நினைத்தால், அது சிறந்த வழி அல்ல. அதற்கு மாறாக, அந்தக் கூட்டத்தை இயக்குபவன் யார்? எனக் கண்டறிந்து அவனை வீழ்த்துவதே சிறந்ததாகும். அவனை வீழ்த்தினாலே மீதம் உள்ள நபர்கள் சரியான வழிகாட்டி இல்லாத காரணத்தால் பிரிந்து விடுவர்.  (விதி-42) (எ-டு): பல நபர்கள் ஒன்றிணைந்

வளைகாப்பின் அறிவியல் பின்னணி

படம்
   நம் முன்னோர்கள் " சடங்குகள்" என்ற பெயரில் நம் உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியமாக விளங்கக் கூடிய பல செயல்களை கடைபிடித்து வந்தனர். ஆனால் அதை நாம் நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் ஒவ்வொன்றாக தொலைத்து வருகிறோம். அந்தச் சடங்குகளில், நாம் தற்காலத்திலும் கடைபிடித்து வரும் ஒரு முக்கியமான சடங்கின் பின்னணியில் ஒளிந்திருக்கும்  அறிவியல் உண்மையைப் பற்றி இந்தப் பதிவில் காணவிருக்கிறோம். வாருங்கள் காண்போம்!   பொதுவாக, கர்ப்பிணி பெண்கள் கருவுற்று ஒன்பதாவது மாதத்தை நெருங்கும்போது வளைகாப்பு அல்லது சீமந்தம்  என்னும் ஒரு சிறப்பான சடங்கு அந்தப் பெண்ணுக்கு நடத்தப்படும். அந்தச் சடங்கின் முக்கியமான நோக்கமே, பல நிறங்களை கொண்ட கண்ணாடி வளையல்களை அந்தப் பெண்ணின் கைகளில் அணிவித்து அழகு பார்ப்பதே ஆகும். அவ்வாறு வளையல்களை அணிவிப்பது ஏன்? என்று நீங்கள் சிந்தித்ததுண்டா! ஆம் நண்பர்களே அந்தச் சடங்கின் பின்னே ஒளிந்திருக்கும் வியப்பூட்டும் அறிவியல் உண்மையை நாம் அறியத் தவறிவிட்டோம்.   பொதுவாக, வயிற்றில் இருக்கும் கருவானது ஒன்பதாவது மாதத்தை நெருங்கும்போது அந்தக் கருவின் மூளை வளர்ச்சி அடையத் தொடங்கும். வெளிநா

ஆங்கிலம் கற்க "ஓபன் டாக்"

படம்
  நான் எனது பள்ளிப் படிப்பை முடித்தவுடன் எனக்குக் கிடைத்த இரண்டு மாத விடுமுறை காலத்தில், ஏதாவது உபயோகமான பழக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் தான், இந்த இரண்டு மாதகாலம் எனக்கு ஆங்கிலம் கற்க உகந்தது என்ற ஒரு முடிவுக்கு வந்தேன். ஆனால் ஆங்கிலம் கற்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும், அதை யாரிடம் பேசுவது என்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.     அப்போது என் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களிடம் ஆலோசனை கேட்டபோது பலரும் ஆங்கில செய்தித்தாள் மற்றும் ஆங்கில சேனல்கள் பார்க்குமாறு அறிவுறுத்தினர். அவ்வாறு செய்வது ஒரு வகையில் உபயோகமாக இருந்தாலும், எந்த மொழியையும் நாம் பிறரிடம் பேசினால் மட்டுமே அதை எளிதில் நம்மால் கற்றுக்கொள்ள முடியும் என்று எனக்குத் தோன்றியது. எனவே நான் ஆங்கிலம் பேசுவதற்கென்று ஏதேனும் ஆன்லைன் செயலிகள் உள்ளதா என்று தேட ஆரம்பித்தேன். அப்போது தான் ஒரு சிறந்த செயலியை ஒருவர் பரிந்துரை செய்தார். அந்த செயலின் பெயர்தான் ஓபன் டாக் அல்லது பட்டி டாக் .    இந்த செயலியின் முக்கியமான சிறப்பம்சமே, மற்ற ஆங்கிலம் கற்கும் செயலிகளில் மாத கட்டணம் வசூலிப்பது

48 அதிகாரத்தின் விதிகள் "பாகம்-2"

படம்
   நான் என்னுடைய கடந்த பதிவுகள் ஒன்றில் " 48 அதிகார விதிகள்" என்னும் புத்தகத்தைப் பற்றிக் கூறியிருக்கிறேன். மேலும் அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள 48 விதிகளில் மூன்று விதிகளை அந்தப் பதிவில் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

நீரின் அற்புத உயிராற்றல்!

படம்
   நாம் அன்றாடம் பருகும் நீருக்கு உயிர் சக்தியும், கேட்கும் திறனும், உணரும் தன்மையும் இயல்பாகவே உள்ளது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் நண்பர்களே! இதை விளக்கும் வகையில் பல அறிவியல் சாட்சிகள் கொட்டிக் கிடக்கின்றன.

"மூலிகை ராணி" துளசியின் மகிமை

படம்
   நம் தமிழர்களின் பழங்கால மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் துளசிச் செடிக்கு என தனி மருத்துவக் குணாதிசயங்கள் உண்டு. மேலும் துளசிக்கு "மூலிகைகள் ராணி" என்னும் சிறப்புப் பட்டமும் உண்டு. தமிழர்கள் துளசிச் செடியை ஆன்மீக வழிபாட்டிற்கும், மருத்துவ ரீதியாக பல நோய்களைப் போக்குவதற்கும் பயன்படுத்துவது உண்டு. அதைத்தவிர துளசிச் செடியை பற்றி நாம் அறியாத பல சுவாரசியமான அறிவியல் நிரூபணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவை யாவை என்பதைப் பற்றி இப்பதிவில் காண்போம்.    பொதுவாக நம் தமிழர்கள் கட்டிய பழங்கால வீடுகளின் , பின் வாசல் முற்றத்திலே நிச்சயமாக துளசிமாடம் ஒன்று அமைந்திருக்கும். அந்த துளசி மாடத்தை அதிகாலையில் பெண்கள் சுற்றி வந்து வழிபடுவது மரபாகும்.     துளசிச் செடியானது 20 மணி நேரம் பிராண வாயுவையும் மீதமுள்ள 4 மணி நேரத்தில் ஓசோன் வாயுவையும் வெளியிடும். ஓசோன் வாயுவிற்கு சூரிய வெளிச்சத்தை உறிஞ்சி தக்க வைத்துக் கொள்ளும் தன்மை உள்ளது. மேலும் காற்றில் உள்ள நச்சு வாயுக்களை சுத்திகரிக்கும் தன்மை துளசிச் செடிக்கு உண்டு. எனவே நாம் அதிகாலையில் துளசிச் செடியை சுற்றி வரும்போது சுத்திகரிக்கப்பட்ட