வளைகாப்பின் அறிவியல் பின்னணி
நம் முன்னோர்கள் "சடங்குகள்" என்ற பெயரில் நம் உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியமாக விளங்கக் கூடிய பல செயல்களை கடைபிடித்து வந்தனர். ஆனால் அதை நாம் நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் ஒவ்வொன்றாக தொலைத்து வருகிறோம். அந்தச் சடங்குகளில், நாம் தற்காலத்திலும் கடைபிடித்து வரும் ஒரு முக்கியமான சடங்கின் பின்னணியில் ஒளிந்திருக்கும் அறிவியல் உண்மையைப் பற்றி இந்தப் பதிவில் காணவிருக்கிறோம். வாருங்கள் காண்போம்!
பொதுவாக, கர்ப்பிணி பெண்கள் கருவுற்று ஒன்பதாவது மாதத்தை நெருங்கும்போது வளைகாப்பு அல்லது சீமந்தம் என்னும் ஒரு சிறப்பான சடங்கு அந்தப் பெண்ணுக்கு நடத்தப்படும். அந்தச் சடங்கின் முக்கியமான நோக்கமே, பல நிறங்களை கொண்ட கண்ணாடி வளையல்களை அந்தப் பெண்ணின் கைகளில் அணிவித்து அழகு பார்ப்பதே ஆகும். அவ்வாறு வளையல்களை அணிவிப்பது ஏன்? என்று நீங்கள் சிந்தித்ததுண்டா! ஆம் நண்பர்களே அந்தச் சடங்கின் பின்னே ஒளிந்திருக்கும் வியப்பூட்டும் அறிவியல் உண்மையை நாம் அறியத் தவறிவிட்டோம்.
பொதுவாக, வயிற்றில் இருக்கும் கருவானது ஒன்பதாவது மாதத்தை நெருங்கும்போது அந்தக் கருவின் மூளை வளர்ச்சி அடையத் தொடங்கும். வெளிநாடுகளில், பெண்மணிகள் கருவுற்ற ஒன்பதாவது மாதத்தில் "டால்பின் பிசியோதெரபி" எனப்படும் விலையுயர்ந்த சிகிச்சையை மேற்கொள்வது உண்டு. அந்த சிகிச்சையின்போது டால்பின்கள் அந்தப் பெண்மணியின் வயிற்றின் அருகே சென்று தொடர்ந்து ஒலி எழுப்ப தொடங்கும். அதாவது அந்த டால்பின்களை அவ்வாறு செய்யும் வகையில் பயிற்சி அளித்து வைத்திருப்பர். இவ்வாறு செய்வதின் காரணம், அந்த டால்பின்கள் எழுப்பும் ஒலியானது குழந்தையின் மூளை நரம்புகளைத் தூண்டச் செய்து மூளை வளர்ச்சியை மிகவும் அபாரமாக கொண்டு செல்லும். இந்தத் தெரபிக்கு அங்கு வசூலிக்கப்படும் பணம், நம் இந்திய மதிப்பின் படி 15 லட்சம் முதல் 20 லட்சம் வரையாகும்.
ஆனால் ஒரு ஆராய்ச்சியில் வளையல்கள் எழுப்பும் ஒலியும் டால்பினின் ஒலியும் பெரிதாக மாறுபட்டவை அல்ல என்று கண்டறியப்பட்டுள்ளது. "இரண்டின் ஒலியும் ஒன்றுக்கொன்று ஒத்துப் போவதாகவே" நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே வளைகாப்பின் போது பெண்ணுக்கு அணிவிக்கப்படும் வளையல்களின் ஒன்று சேர்ந்த ஒலியானது கருவின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது என்பது தெரியவந்துள்ளது. மேலும், வளைகாப்பு அன்று அணிவித்த வளையல்களை குழந்தை பிறக்கும் வரை கழட்டாமல் அணிந்தால்தான் சடங்கானது முழுமை பெறும். ஆனால் தற்காலப் பெண்கள் ஓரிரு நாட்களிலேயே வளையல்களை கைகளிலிருந்து கழட்டி விடுகின்றனர். அது மிகவும் தவறான செயலாகும். வளையல்களை குழந்தை பிறக்கும் வரை அணிந்தால் தான், தினமும் குழந்தையானது அந்த ஒலியைக் கேட்கும் வாய்ப்பைப் பெறும். அப்போதுதான் மூளை நரம்புகளும் ஒரு சிறந்த வளர்ச்சியை எட்டும்.
இந்தக் காரணத்தால் தான் நம் முன்னோர்கள் அன்றே இந்தச் சடங்குகளை செய்து வந்துள்ளனர். மேலும், வெளிநாடுகளில் செலவழிப்பது போல் இதற்காக நாம் பெரிதாக பணம் செலவழிக்க வேண்டிய அவசியமும் இல்லை. தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்திலேயே நம் முன்னோர்கள் இவ்வாறு எப்படி புத்திசாலித்தனமாக சிந்தித்தனர் என்பதை நினைத்தால் மெய் சிலிர்க்கிறது!!
இதைப்போன்றே நம் முன்னோர்கள் செய்து வந்த பல சடங்குகளின் பின் ஒளிந்திருக்கும் அறிவியல் உண்மைகளை இனி வரும் பதிவுகளில் தொடர்ந்து காண்போம் தோழர்களே!
எனது இப்பதிவைப் படித்தமைக்கு மிக்க நன்றி தோழர்களே! என் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். மேலும் ஒரு சிறந்த பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்!
நன்றி!
Super da 👏👏
பதிலளிநீக்குஇதைப் போன்ற அறிவியல் தகவல்களை தொடர்ந்து பதிவிடுங்கள்......
பதிலளிநீக்கு