நீரின் அற்புத உயிராற்றல்!

   நாம் அன்றாடம் பருகும் நீருக்கு உயிர் சக்தியும், கேட்கும் திறனும், உணரும் தன்மையும் இயல்பாகவே உள்ளது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் நண்பர்களே! இதை விளக்கும் வகையில் பல அறிவியல் சாட்சிகள் கொட்டிக் கிடக்கின்றன.
  
  
  மேலும் அனைத்து மதங்களும் இதைத் தவறாமல் வலியுறுத்துகின்றன. இந்தப் பதிவில் நாம் நீரைப் பற்றி அறியாத பல சுவாரசியமான தகவல்களைப் பற்றிக் காணவிருக்கிறோம். வாருங்கள் காண்போம்!

    

   நாம் பொதுவாக நீரை ஒரு ஜடப்பொருளாகவே கருதி வாழ்கிறோம். அது முற்றிலும் தவறு. நீருக்கு நேர்மறையான எண்ணங்கள், எதிர்மறையான சூழல்கள் போன்றவற்றை உணர்ந்து, அதற்கேற்றவாறு அதனுடைய தன்மையையும் ஆற்றல் சக்தியையும் மாற்றிக் கொள்ளும் தன்மை உள்ளது. இந்த உண்மை பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

   இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக பிரபலமான ஆய்வு ஒன்றைக் கூறலாம். ஆய்வின்போது இரண்டு தனித்தனி குவளைகளில் சமமான அளவில் நீரை நிரப்புகின்றனர். அந்த 2 குவளைகளையும் மாறுபட்ட சூழல்களில் முழுமையாக ஒருநாள் வைக்கின்றனர். 


   அதாவது, ஒரு குவளையை அமைதி மற்றும் மகிழ்ச்சி நிறைந்த சூழலிலும், மற்றொரு குவளையை துக்கம் மற்றும் துன்பம் நிறைந்த சூழலிலும் வைக்கின்றனர். ஒருநாள் முடிந்த பிறகு, அந்த 2 குவளைநீரையும்   நுண்ணோக்கியின் (microscope) மூலம் பார்க்கும்போது ஓர் அற்புதம் நிகழ்ந்தது. இரண்டு குவளை நீரின் செல்கள் வடிவமைப்பும், கட்டமைப்பும் முற்றிலுமாக மாறுபட்ட நிலையில் இருந்தது.

            துக்கம்                          மகிழ்ச்சி                     

   அதாவது மகிழ்ச்சியான சூழலில் வைக்கப்பட்ட  நீரின் செல் வடிவமைப்பானது மிகவும் கவர்ச்சியாகவும், அழகாகவும் ஒரு வைரக்கல் வடிவில் காணப்பட்டது. துக்கமான சூழலில் வைக்கப்பட்ட நீரின் வடிவமைப்பு, ஒரு முறையான வடிவமின்றி அங்கும் இங்கும் கலைந்த நிலையில் காணப்பட்டது. 


   இந்த ஆய்வின் மூலம் நீர் அதன் சூழலுக்கேற்ப உயிர் தன்மையையும், வடிவத்தையும் மாற்றிக் கொள்ளும் தன்மை உடையது என்று கண்டறியப்பட்டது. கேட்கும்போதே புல்லரிக்கிறது நண்பர்களே!

  

  நாம் பெரும்பாலும் ஒருவர் இறந்த வீட்டிற்குச் சென்றால் அங்கே பல உறவினர்கள் அந்த வீட்டில் உண்ணாமல், பச்சைத் தண்ணீர் கூட குடிக்காமல் இருப்பது உண்டு. ஏன்? என்று கேட்டால் இறப்பு நிகழ்ந்த வீட்டில் நீர் அருந்துவதும், உணவு உண்பதும் தீட்டு என்றும் உடலுக்கு ஒவ்வாது என்றும் பொதுவாகக் கூறுவர். 


   அதற்கான உண்மையானக் காரணம், இறப்பு வீட்டில் துக்கமான சூழலும், எதிர்மறையான எண்ண அலைகளும் நிரம்பி உள்ளதால் அந்த வீட்டில் உள்ளத் தண்ணீரும் அதனால் பாதிக்கப்பட்டு இருக்கும். அந்த நீரின் உயிர்சக்தியானது குறைந்தே இருக்கும்.

  

   இதற்கு இன்னொரு சிறந்த எடுத்துக்காட்டாக, கோவிலில் கும்பாபிஷேக நாளன்று நம்மீது சக்தி வாய்ந்த கலச நீர் தெளிக்கப்படுவது வழக்கம். அந்த நீர் நம் மீது தெளிக்கப்படுவதற்கு முன்பே, பல நாட்கள் சக்தி வாய்ந்த மந்திரங்கள் ஓதப்பட்டு அதன் உயிர்சக்தி ஓங்கிய பிறகே கலசத்தில் அடைத்து நம்மீது தெளிக்கப்படுகிறது.

  மேலும் பழங்காலத்தில் வாழ்ந்த முனிவர்கள் எங்கே சென்றாலும் தங்களுடைய கைகளில் ஒரு நீர் கமண்டலத்துடன் செல்வது வழக்கம். பிறரை வாழ்த்தும் போதும், சபிக்கும் போதும் சொற்களையோ அல்லது மந்திரங்களையோ நீரிடம் உறைத்து பின் அவர்கள்மீது தெளிப்பர். அவ்வாறு நீரிடம் நல்ல சொற்களை உரைக்கும் போது அதன் உயிர்சக்தி பல மடங்கு அதிகரிக்கும். 

  

  நம் வாழ்வில் அத்தியாவசியமாக விளங்கும் நீருக்கு தினமும் நாள் தவறாமல் நன்றி கூறப் பழகுவோம்.
 
"நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு".
 
  எனது இப்பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி நண்பர்களே! இந்த நீரைப் பற்றிய தகவல்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் கீழே உள்ள கருத்து பெட்டியில் உங்களுடைய கருத்துக்களைப் பதிவிடவும். மீண்டும் ஒரு சிறந்த பதிவுடன் உங்களைச் சந்திக்கிறேன்.

                                      நன்றி!

 

  

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மார்க்கோபோலோவின் தமிழ்ப் பயணக் குறிப்புகள்

reasons why you should read a book | புத்தகங்கள் ஏன் படிக்கவேண்டும்?

சிதம்பர நடராஜர் கோவில் இரகசியம்