48 அதிகாரத்தின் விதிகள் "பாகம்-2"
1)ஒருபோதும் இலவசத்தை ஏற்காதே:
நம்மிடம் யாரேனும் ஒருவர் ஒரு பொருளை இலவசமாக தருவதாகக் கூறும்போது அதை நாம் உடனடியாக ஏற்பது நமக்கு பின்னாளில் ஆபத்தையே விளைவிக்கும். அதற்கான காரணம், எவர் ஒருவரும் லாபம் இன்றி ஒரு பொருளை இலவசமாக தருவது என்பது மிகவும் அரிதான ஒரு விஷயம். அவ்வாறு கொடுக்க முன்வந்தால் நிச்சயமாக அவர் நம்மிடம் பதிலுக்கு ஏதேனும் ஒரு விஷயத்தை எதிர்பார்த்தே கொடுக்கிறார்கள் என்பதே அர்த்தம். அதனால் ஒரு பொருளோ அல்லது ஏதேனும் ஒன்று இலவசமாக கிடைக்கிறது என்றால் அதன் பின்னணியை ஆராயாமல் உடனடியாக ஏற்பது தவறாகும்(விதி-40)
2)மக்களின் திறவுகோலை அறிந்து செயலாற்று:
பொதுவாக மனிதர்கள் என்றாலே ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் ஆர்வம் உள்ளவராகவோ அல்லது அதற்கு அடிமையாகவோ இருப்பர். அந்த விஷயம்தான் அவர்களுடைய திறவு கோலாகச் செயல்படுகிறது. நீங்கள் ஒருவரை உங்கள் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்று நினைத்தால் அவர்களுடைய சாவி எது என்பதை கண்டறிந்தாலே போதுமானது. மேலும், நீங்கள் ஒரு கூட்டத்தையே உங்கள் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்று எண்ணினால், அந்தக் கூட்டம் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்பதைக் கண்டறிந்து அந்த நபருடைய சாவியை இயக்குவது, அந்த மொத்த கூட்டத்தையே உங்கள் கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.3)உன் செயலுக்கான பாராட்டை பிறருக்குக் கொடுத்து விடு:
உங்கள் கையில் எப்போதும் அதிகாரம் இருக்கவேண்டும் என்று நினைத்தால், உங்களிடம் தான் அதிகாரம் இருக்கிறது என்பதை யாரிடமும் காட்டிக் கொள்ளக் கூடாது. இயக்குபவர் நீங்களாக இருந்தாலும், செயலைச் செய்து முடித்தவர் நீங்களாகவே இருந்தாலும் இறுதிவரை அது நீங்கள் தான் என்பதை மக்களுக்கு தெரியப் படுத்தக்கூடாது. உங்களின் செயலுக்கான அங்கீகாரத்தை உங்கள் செயலுக்கு நீங்கள் கருவியாக பயன்படுத்திய ஒருவரிடம் கொடுத்துவிட வேண்டும்.
இந்த விதியை பின்பற்றுவோர் தான் தற்போது இவ்வுலகில் சர்வாதிகார நிலையில் அமர்ந்திருப்பார்கள். ஆனால் அவருடைய முகத்தையோ, அடையாளத்தையோ நம்மிடம் காட்டிக் கொள்ள மாட்டார்கள். இந்த விதியே இந்த புத்தகத்தின் சிறந்த விதியாகக் கருதப்படுகிறது. இந்த விதியைப் பயன்படுத்தினால் நம்மிடமிருந்து அதிகாரத்தை யாராலும் பறித்துச் செல்ல முடியாது.(விதி-48)
இந்தப் பதிவைப் படித்த மைக்கு மிக்க நன்றி நண்பர்களே மீண்டும் ஒரு சிறந்த பதிவுடன் உங்களை சந்திக்கிறேன். உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கருத்து பெட்டியில் பதிவிடவும்.
இந்தப் புத்தகத்தின் விதிகளைப் பற்றி நான் எழுதியுள்ள இன்னொரு பதிவைப் படிக்க விரும்பினால், கீழ்காணும்👇இணைப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
https://diviyathamizh.blogspot.com/2020/07/blog-post_17.html
நன்றி!
அருமை
பதிலளிநீக்குSuper divi continue it it's useful
பதிலளிநீக்குIt's really interesting bro. Iam eager to know about other laws
பதிலளிநீக்கு