"மூலிகை ராணி" துளசியின் மகிமை

   நம் தமிழர்களின் பழங்கால மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் துளசிச் செடிக்கு என தனி மருத்துவக் குணாதிசயங்கள் உண்டு. மேலும் துளசிக்கு"மூலிகைகள் ராணி"என்னும் சிறப்புப் பட்டமும் உண்டு. தமிழர்கள் துளசிச் செடியை ஆன்மீக வழிபாட்டிற்கும், மருத்துவ ரீதியாக பல நோய்களைப் போக்குவதற்கும் பயன்படுத்துவது உண்டு. அதைத்தவிர துளசிச் செடியை பற்றி நாம் அறியாத பல சுவாரசியமான அறிவியல் நிரூபணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவை யாவை என்பதைப் பற்றி இப்பதிவில் காண்போம்.

   பொதுவாக நம் தமிழர்கள் கட்டிய பழங்கால வீடுகளின், பின் வாசல் முற்றத்திலே நிச்சயமாக துளசிமாடம் ஒன்று அமைந்திருக்கும். அந்த துளசி மாடத்தை அதிகாலையில் பெண்கள் சுற்றி வந்து வழிபடுவது மரபாகும்.

    துளசிச் செடியானது 20 மணி நேரம் பிராண வாயுவையும் மீதமுள்ள 4 மணி நேரத்தில் ஓசோன் வாயுவையும் வெளியிடும். ஓசோன் வாயுவிற்கு சூரிய வெளிச்சத்தை உறிஞ்சி தக்க வைத்துக் கொள்ளும் தன்மை உள்ளது. மேலும் காற்றில் உள்ள நச்சு வாயுக்களை சுத்திகரிக்கும் தன்மை துளசிச் செடிக்கு உண்டு. எனவே நாம் அதிகாலையில் துளசிச் செடியை சுற்றி வரும்போது சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான பிராணவாயுவை நாம் சுவாசிப்போம். இதன் மூலம் நமக்கு ஒரு புது புத்துணர்ச்சி மற்றும் உத்வேகம் கிடைக்கும்.

    அடுத்ததாக கோயில்களில் பூஜைக்கு பிறகு ஊறவைத்த துளசி நீரைத் தீர்த்தமாக வழங்குவர். அந்த செயலுக்கும் ஒரு அறிவியல் தொடர்பு உண்டு. துளசி இலையை நீரில் எட்டு மணி நேரம்  ஊறவைத்தால், நீரில் முன்பு ஒரு மில்லியனுக்கு 7.4 பாகங்கள் இருந்த  ஃவுளூரைடு(fluoride) அளவு 1.1 ஆகக் குறைவது தெரியவந்துள்ளது. நீரில் ஃவுளூரைடு அளவானது, மில்லியனுக்கு 0.5பாகத்தில் இருந்து 1பாகத்திற்கு உள்ளாக இருப்பதே பாதுகாப்பானதாம்!. கேட்கவே வியப்பூட்டும் வகையில் உள்ளதல்லவா?


   மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா, ஆக்ராவில் அமைந்திருக்கும் உலக அதிசயமான தாஜ்மஹால் காற்று மாசின் காரணமாக வெள்ளை நிறம் மாறி மஞ்சள் நிறத்தில் காணப்பட்டது. அந்த சமயத்தில் உத்தரப்பிரதேச வனத்துறையானது, தாஜ்மகாலைச் சுற்றி இலட்சக்கணக்கான துளசிச் செடிகளை நடும் வேலையில் இறங்கியது.  துளசிச் செடிக்கு காற்றைச் சுத்திகரிக்கும் தன்மை அதிகமாக உள்ளதால் காற்று மாசை அது வெகுவாக குறைக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசின் காரணமாக தாஜ்மஹால் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது.

   ஒருமுறைஇந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு நடத்திய ஒரு ஆய்வில் துளசிச் செடிக்கு இயற்கையாகவே கதிரியக்க நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது என்ற வியப்பூட்டும் தகவலும் கண்டறியப்பட்டுள்ளது.

  மேற்கூறியவற்றைத் தவிர மேலும் துளசிச் செடிக்கு எண்ணில் அடங்காத பல குணாதிசயங்கள் உண்டு. இதை நம் தமிழர்கள் முன்பே அறிந்து அதை நல்ல வகையில் உபயோகித்து இருக்கிறார்கள் என்பதை நினைத்து நாம் பெருமை கொள்ள வேண்டும். வாழ்க தமிழ்! வளர்க புகழ்!

  என் பதிவை படித்தமைக்கு மிகவும் நன்றி நண்பர்களே! உங்களுடையக் கருத்துக்களை கீழே உள்ள கருத்து பெட்டியில் பதிவிடவும். மீண்டும்  ஒரு சிறந்த பதிவுடன் விரைவில் உங்கைளை சந்திக்கிறேன். 

                                      நன்றி!
   
   

    

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மார்க்கோபோலோவின் தமிழ்ப் பயணக் குறிப்புகள்

reasons why you should read a book | புத்தகங்கள் ஏன் படிக்கவேண்டும்?

சிதம்பர நடராஜர் கோவில் இரகசியம்