நம் தமிழர்களின் பழங்கால மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் துளசிச் செடிக்கு என தனி மருத்துவக் குணாதிசயங்கள் உண்டு. மேலும் துளசிக்கு "மூலிகைகள் ராணி" என்னும் சிறப்புப் பட்டமும் உண்டு. தமிழர்கள் துளசிச் செடியை ஆன்மீக வழிபாட்டிற்கும், மருத்துவ ரீதியாக பல நோய்களைப் போக்குவதற்கும் பயன்படுத்துவது உண்டு. அதைத்தவிர துளசிச் செடியை பற்றி நாம் அறியாத பல சுவாரசியமான அறிவியல் நிரூபணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவை யாவை என்பதைப் பற்றி இப்பதிவில் காண்போம். பொதுவாக நம் தமிழர்கள் கட்டிய பழங்கால வீடுகளின் , பின் வாசல் முற்றத்திலே நிச்சயமாக துளசிமாடம் ஒன்று அமைந்திருக்கும். அந்த துளசி மாடத்தை அதிகாலையில் பெண்கள் சுற்றி வந்து வழிபடுவது மரபாகும். துளசிச் செடியானது 20 மணி நேரம் பிராண வாயுவையும் மீதமுள்ள 4 மணி நேரத்தில் ஓசோன் வாயுவையும் வெளியிடும். ஓசோன் வாயுவிற்கு சூரிய வெளிச்சத்தை உறிஞ்சி தக்க வைத்துக் கொள்ளும் தன்மை உள்ளது. மேலும் காற்றில் உள்ள நச்சு வாயுக்களை சுத்திகரிக்கும் தன்மை துளசிச் செடிக்கு உண்டு. எனவே நாம் அதிகாலையில் துளசிச் செடியை சுற்றி வரும்போது சுத்திகரிக்கப்பட்ட