48 அதிகாரத்தின் விதிகள்

  
   
    இந்த ஊரடங்கு சமயத்தில் நான் படித்த புத்தகங்களில் என்னை மிகவும் நெகிழச் செய்த ஒரு புத்தகமே "48 அதிகார விதிகள்". நம் வாழ்வில் அதிகாரத்தை அடைவதற்கான 48 விதிகளை இந்த புத்தகத்தின் ஆசிரியரான ராபர்ட் கிரீன் மிகச் சுருக்கமாகவும், எளிமையாகவும் கூறியுள்ளார். அந்த 48 விதிகளில் மிகவும் சுவாரசியமான மூன்று விதிகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1) உங்களைப் பற்றி அனைத்தையும் பகிராதீர்கள்:
   
   நாம் பொதுவாக புது நபர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பேசும்போது நம்மைப் பற்றிய அனைத்து விவரங்கள், உண்மைகள் மற்றும் இரகசியங்களையும் விரைவில் பகிர்ந்து விடுவோம். இது முற்றிலும் தவறான செயல் ஆகும். இன்று நமக்கு நண்பராக இருப்பவர்கள் நாளை நமது எதிரியாகவும் மாறலாம். அவ்வாறு மாறும்போது நம்மை வீழ்த்துவது அவர்களுக்கு சுலபமாகிவிடும். எனவே நாம் எப்போதும் ஒரு புரியாத புதிராகவே செயலாற்ற வேண்டும். அதுவே நமக்கு ஆயுதம். (விதி-6)

2) எந்தப் பக்கமும் சாயாதே:

   நாம் நம் வாழ்வின் பல சூழல்களில் தாயா?மனைவியா?நண்பனா?எதிரியா? போன்ற சிரமமான கேள்விகளை எதிர்கொள்வோம். அது போன்ற சூழல்களில், நாம் இரு பக்கமும் சாயாமல் இருப்பதே சிறந்ததாகும். நாம் நண்பனின் பக்கம் சாய்ந்தோம் என்றால் எதிரிக்கு நம் மீது குரோதம் ஏற்படும். எதிரியின் பக்கம் சாய்ந்தால் நண்பன் நம்மை விட்டு பிரிந்து விடுவான். எனவே இருவர் பக்கமும் உள்ள நிறை, குறைகளை சரியாக எடுத்துக் கூறவேண்டும். யார் பக்கமும் சாயாமல் சமநிலையில் இருந்தோம் என்றால் இரு தரப்பினரிடமும் நம் மதிப்பு குறையாது. (விதி-20)
(எ-டு): ஒரு ரூபாய் காசு இரு பக்கமும் சாயாமல் சுழலும் போது, அது எந்த பக்கம் சாயும் என்பதில் ஒரு சுவாரசியம்  உருவாகுமல்லவா? அதே போலத்தான்.



3) எதிரியை வெல்ல மூடனாக நடி:
  
  நாம் ஒருவரை வெல்ல வேண்டும் என்று நினைத்தால், அந்தக் குறிப்பிட்ட நபரிடம் நமக்கு ஒன்றும் தெரியாதது போலும், நமக்கு திறமைகள் இல்லாதது போன்றும் நடிக்க வேண்டும். அவ்வாறு நடிக்கும் போது நம் எதிரி, நம்முடைய பலம் மற்றும் பலவீனத்தை அறிவது கடினம். சரியான சமயத்தில் நம்முடைய முழு திறமைகளையும் காட்டும்போது நம் எதிரி திகைப்பில் ஆழ்ந்து விடுவான். அவனை வெல்வதும் வெகு சுலபமாகி விடும். எதிரியை மறைமுகமாக வெல்வதற்கு மட்டுமே இந்த யுக்தி பயன்படும். (விதி-21)
   
   என்னுடைய பதிவை படித்தைமைக்கு மிகவும் நன்றி நண்பர்களே! உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கருத்துப் பெட்டியில் பதிவிடுங்கள். மீண்டும் ஒரு நல்ல பதிவுடன் உங்களைச் சந்திக்கிறேன்.
                                     நன்றி!


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மார்க்கோபோலோவின் தமிழ்ப் பயணக் குறிப்புகள்

reasons why you should read a book | புத்தகங்கள் ஏன் படிக்கவேண்டும்?

சிதம்பர நடராஜர் கோவில் இரகசியம்