"ஒரு நூலின் தரத்தை அதன் அட்டையைக் கொண்டு மதிப்பிடாதே" என்னும் பழமொழியை இந்தப் பதிவை படிக்கும் அனைவரும்
நன்கு அறிவீர்கள்.
இந்தத் தொழில்நுட்ப காலத்தில் இதனை முழுமையாக ஏற்பது சற்று கடினமாகவே உள்ளது. ஆம் நண்பர்களே! நாம் புதிதாக ஒருவரைக் காணும்போது நம்முடைய ஆழ்மனதானது அந்த நபருடைய வெளித் தோற்றத்தையும், ஆடை அறிவையும் வைத்தே அவரின் தன்மையை மதிப்பிடும்.
நாம் அனைவரும் பல இடங்களில் நம் தோற்றத்தை வைத்தே மதிப்பிடப்படுகிறோம் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.
(எ-டு) : நாம் கலந்துகொள்ளும் பல நேர்காணல்களில் நம்முடைய ஆடை அறிவிற்கு என தனி மதிப்பு உண்டு. நம் மீது ஏற்படும் முதல் அபிப்ராயம் இதனை பொறுத்தே அமையும்.
1) செல்லும் இடங்களுக்கு ஏற்ப உடுத்தும் ஆடையும் மாறுபட வேண்டும். சூழலுக்கேற்ப ஆடை உடுத்துவதில் நாம் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். அதாவது வீட்டில் உடுத்தும் ஆடைகளையே வெளி இடங்களுக்கும், விசேஷங்களுக்கும் உடுத்திச் செல்வது ஏற்புடையதல்ல.
2) முக்கியமாக, முதலில் நாம் உடுத்தும் ஆடையை சுருக்கங்கள் தெரியாதவாறு நன்கு
இஸ்திரி செய்து உடுத்த வேண்டும். இதுவே ஆடை அறிவின்
முதல் அடிப்படையாக விளங்கும்
.
3) நாம் தேர்ந்தெடுக்கும் ஆடையின் நிறம் மற்றும் பொருத்தம் நம்முடைய மன முதிர்ச்சியை(maturity) பிறருக்கு தெரிவிக்கும். ஆம் நண்பர்களே! ஒரு ஆடையின் நிறமானது பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் ஆற்றல் கொண்டது. எடுத்துக்காட்டாக சிகப்பு மற்றும் மஞ்சள் நிற ஆடைகளை கூறலாம்.
4) நாம் தேர்வுசெய்யும் ஆடையின் நிறமானது நம் முகத்தோல் நிறத்திற்கு எடுப்பாக இருக்க வேண்டும். வெளுமை முகத்தோல் கொண்டவர்கள் அடர் நீலம், அடர்பச்சை போன்ற அடர் நிறங்களை தேர்ந்தெடுப்பது சிறந்தது. அதேபோல் கருமை முகம் கொண்டவர்கள் வெளிர் நிறங்களை தேர்ந்தெடுப்பது சிறப்பு.
5) இறுதியாக ஆடை அறிவைப் பொருத்தவரை மறக்கக் கூடாத ஒன்று, நாம் உடுத்தும் ஆடை தரமானதா என்று பார்ப்பதைவிட, நம்முடைய உடல் வகைக்கு ஏற்றவாறு கச்சிதமாகப்
பொருந்துகிறதா என்பதை கவனமாகப் பார்க்க வேண்டும். இதை முக்கியமாகக் கருத்தில் கொள்ளுங்கள்.
என்னுடைய இப்பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி நண்பர்களே! மீண்டும் ஒரு சிறந்த பதிவில் உங்களைச் சந்திக்கிறேன்.
நன்றி!
EXCELLENT
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோதரி🙏
நீக்கு