நமக்கு ஏற்ற புத்தகம் எது?
பொதுவாக, நமது நெருங்கிய நண்பர் நம்மிடம் ஏதேனும் ஒரு புத்தகத்தைக் கொடுத்து இது மிகவும் பயனுள்ளது என்று கூறினால் உடனே நாம் அதை வாங்கிப் படிக்கத் தொடங்குவோம். இந்தத் தவறை நாம் முற்றிலும் தவிர்க்க வேண்டும். நம் நண்பருக்கு சிறந்ததாகத் தோன்றிய புத்தகம் நமக்குத் தோன்றாமலும் போகலாம். உங்களுக்கு ஏற்ற புத்தகம் எது என்பதை கண்டறிய ஒரு சிறந்த வழி உள்ளது.
1) முதலில் நீங்கள் தேர்ந்தெடுத்த புத்தகத்தின் முன்னுரையை முழுமையாகப் படியுங்கள். அந்த முன்னுரையிலேயே அந்தப் புத்தகம் எதைப் பற்றியது? உங்களுக்கு ஏற்றதா? என்பதற்கான விடை எளிதில் கிடைத்து விடும். இந்த விதியை பின்பற்றாமல் பல நபர்கள், பிறரின் அறிவுரையை நம்பி புத்தகத்தை வாங்கி படிக்க தொடங்குவார்கள். இதனால் முதல் பத்து பக்கங்களை கடந்தவுடன் புத்தகத்தின் மீது உள்ள ஆர்வம் குறையத் தொடங்கும்.
2) புத்தகங்களில் பல வகைகள் உள்ளது. அவற்றை நமது வயதுக்கு, தொழிலுக்கு, ஆர்வத்திற்கு ஏற்றார்போல் பிரித்துக்கொள்ள வேண்டும். நம்முடைய வயது மற்றும் தொழிற்கு ஏற்ற புத்தகங்களை படிக்கும்போது அதன் மீது நமக்கு மிகுந்த ஆர்வம் ஏற்படும்.
(எ-டு): வாலிப வயதில் உள்ளவர்கள் சுய மேம்பாட்டு புத்தகங்கள் படிப்பதிலும், வயதானவர்கள் கதை மற்றும் நாவல் புத்தகங்கள் படிப்பதிலும் ஆர்வம் கொள்வர். தொழிலதிபர்கள் கால நிர்வாகம், நிதி நிர்வாகம் சம்பந்தமான புத்தகங்களை விரும்புவர்.
3) நாம் ஒரு புத்தகத்தை படிக்கும் போதே நம்முடைய ஆழ்மனதானது ஒரு விதமான உணர்வை நமக்கு ஏற்படுத்தும். அந்த உணர்வு உற்சாகம், ஊக்கம் ஆர்வமின்மை, புத்தகத்தின் கருத்தில் நம்பிக்கையின்மை, போன்ற எதுவாகவும் இருக்கலாம். அந்த உணர்வு எதிர்மறையாக இருந்தால் அந்தப் புத்தகம் நமக்கு எந்த வகையிலும் உதவாது என்பதே அர்த்தம்.
கீழ்க்காணும் புத்தகங்கள் யாவும் எனக்குத் தனிப்பட்ட முறையில் மிகவும் உதவிய புத்தகங்கள் ஆகும். இவற்றின் முன்னுரை உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களும் படித்துப் பயன் பெறலாம்.
இந்தப் புத்தகம் ஆண்-பெண் இருபாலரின் வேறுபட்ட மனநிலைகளை பற்றியும் இருவரின் இயற்கையான பண்புகளைப் பற்றியும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. |
நன்றி!
Excellent keep going Anna
பதிலளிநீக்கு