இடுகைகள்

Science behind Indian traditions | இந்திய மரபுகளின் அறிவியல்(பாகம்-2)

படம்
 Science behind Indian traditions:  நான் என்னுடைய கடந்த பதிவில் , இந்திய கோவில்களுக்கு பின் ஒளிந்திருக்கும் மூன்று அறிவியல் இரகசியங்கள் பற்றி எழுதியிருந்தேன். ஆனால் அது மூன்றில் அடங்கும் அளவிற்கு சிறிதல்ல. நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அறிவியல் ரகசியங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் ஒரு சிலவற்றை தொகுத்து இரண்டாம் பாகமாக இந்தப் பதிவில் எழுதியுள்ளேன். படித்துப் நன்கு பயன்பெறுங்கள்.  கோவில்கள் கட்டப்பட்ட முறை:     இந்திய கோவில்களின் கட்டமைப்பை பொருத்தமட்டில், அடித்தளத்திலிருந்து மேலே செல்லும் போது ஒருவிதமான காற்றியக்கவியல் (aerodynamic) சார்ந்த அமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும். மேலும் அந்த கோபுரத்தின் உச்சியில் பல கலசங்களும் பொருத்தப்பட்டிருக்கும். இவ்வாறு உருவாக்கப்பட்டதற்கான முக்கியக் காரணம், பிரபஞ்சத்தின் மிக சக்திவாய்ந்த காற்றலைகளை எளிதில் தன்வசம் இழுத்து விடக்கூடிய தன்மை அந்த கோபுரத்தின் அமைப்பு மற்றும் கலசங்களுக்கு உள்ளது.    அந்த கோபுரத்தின் கலசங்களுக்குள் நெல் , அரிசி மற்றும் வரகு போன்ற பாரம்பரிய நெல் வகைகள் இருப்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணம். நெல், இயற்கையாகவே சற்று காந்

Science behind Indian traditions | இந்திய மரபுகளின் அறிவியல்

படம்
Science behind Indian traditions:    நான் என்னுடைய பதிவுகளில் பெரும்பாலும் இந்திய கலாச்சாரம், இந்திய புராணம் சார்ந்த தகவல்கள், அதன்பின் ஒளிந்திருக்கும் வியக்கத்தக்க அறிவியல் உண்மைகள் பற்றி தான் எழுதி வருகிறேன். அதே போன்று இந்தப் பதிவிலும் நம்முடைய சிறப்புமிக்க கலாச்சாரத்தில் ஒளிந்திருக்கும் சில அறிவியல் உண்மைகளைப் பற்றி காணவிருக்கிறோம். வாருங்கள் காண்போம். ஐம்புலன்களை தூண்டும் கோவில்:   இந்திய கோவில்கள் பொருத்தமட்டில் ஏராளமான அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வுகள் நிகழ்ந்துள்ளது, இன்றும் நிகழ்ந்து வருகிறது. அவற்றில் என்னை மிகவும் நெகிழச் செய்த ஒரு அறிவியல் ஆய்வு பற்றி இங்கு நான் கூற விரும்புகிறேன்.    இந்திய கோவில்களுக்குள் நுழையும்போது, இயற்கையாகவே நம்முடைய ஐம்புலன்களும் நன்கு தூண்டப்படுகிறது. எப்படி என்று சொல்கிறேன் கேளுங்கள்.                   தொடு உணர்வு- தெய்வ வழிபாட்டின்போது கற்பூரத்தை தொட்டு வணங்கும் போது தூண்டப்படுகிறது. பார்வை உணர்வு - கோவில்களை சுற்றிலும் எரிந்து கொண்டிருக்கும் தீபங்களை பார்க்கும்போது தூண்டப்படுகிறது. சுவை உணர்வு - கோவில் அபிஷேகம் முடிந்த பின்ப

Ancient coins of India | சங்ககால இந்திய நாணயங்கள்

படம்
Ancient coins of India:   நாம் அனைவரும் நம் இந்திய நாட்டின் நாணயங்களான 25 பைசா, 50 பைசா, 10 பைசா, அதற்கும் சில வருடம் பின்னோக்கிச் சென்றால் ஓட்டை நாணயங்கள் போன்றவற்றை பற்றி நன்றாக அறிந்து இருப்போம்.    அதிலிருந்து மேலும் ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றால், நம்முடைய முப்பாட்டன்களான சேர சோழ பாண்டியன் பயன்படுத்திய தமிழக நாணயங்களைப் பற்றி அறிந்திருப்பது சற்றுக் குறைவுதான்.                         எனவே இந்தப் பதிவில் கிமு 4ஆம் நூற்றாண்டில் இருந்து கிபி 1867ஆம் வரை நம் தமிழர்கள் பயன்படுத்திய ஒரு சில நாணயங்கள் பற்றிய தொகுப்பை சுருக்கமாக காணவிருக்கிறோம். வாருங்கள் காண்போம்! தமிழக நாணயங்கள் அச்சிடப்பட்ட முறை: கிபி 1800 ம் நூற்றாண்டு வரையில் தமிழ்நாட்டிற்கென தனி நாணயங்கள் புழக்கத்தில் இருந்தது. தமிழக நாணயங்களைப் பொறுத்தவரையில், அதன் வடிவமைப்பானது பெரும்பாலும் சதுரம் அல்லது சதுரம் சார்ந்த வடிவமைப்பிலேயே இருக்கும். நாணயத்தின் முன்பக்கம் எந்த அரசன் அந்த நாணயத்தை வெளியிட்டாரோ அவருடைய நாட்டின் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும்.    (எ-டு) : சோழ அரசருடைய நாணயத்தில்  புலி சின்னமும், பாண்டிய அ

raji an ancient epic review | ராஜி ஒரு பண்டைய காவியம்

படம்
  Raji an ancient epic review:     பொதுவாக, நம்முடைய இந்திய புராணங்கள் மற்றும் அதனுடைய சிறப்புகள் போன்றவற்றை நாம் புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொள்வதே வழக்கம். தற்போதைய தொழில்நுட்ப காலத்தில் புத்தகம் பரிணாம வளர்ச்சி அடைந்து, சமூக வலைதளங்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் நமக்கு புராணங்களை கற்பிக்கிறது.    எனவே, இந்தப் பதிவில் நம்முடைய இந்திய புராணக் கதைகளை சித்தரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள "ராஜி" என்று பெயர் பெற்றிருக்கும் ஆன்லைன் விளையாட்டு ஒன்றை பற்றிக் காணவிருக்கிறோம். வாருங்கள் காண்போம்! ராஜி ஒரு பண்டைய காவியம்:  (raji an ancient epic)     ராஜி எனப்படும் இந்த ஆன்லைன் விளையாட்டு அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 15, 2020 ஆம் தேதி பிரபல நிறுவனமான மைக்ரோசாப்ட் விண்டோஸ் தளத்தின் மூலம் வெளியிடப்பட்டது. 13 பேர் கொண்ட குழுவை வைத்து நாடிங் ஹெட்ஸ் கேம்ஸ் ( Nodding heads games)   எனப்படும் மகாராஷ்டிராவில் அமைந்துள்ள நிறுவனம் இந்த ஆன்லைன் விளையாட்டை தயாரித்துள்ளது. இந்த ஆன்லைன் விளையாட்டானது மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.     இந்திய புரா

reasons why you should read a book | புத்தகங்கள் ஏன் படிக்கவேண்டும்?

படம்
 R easons why you should read a book:   நான் என்னுடைய புத்தகம் பற்றிய கடந்த பதிவுகளில், "எது சிறந்த புத்தகம்?  எவ்வாறு புத்தகம் படிப்பது?  புத்தகத்தின் மூலம் பயனடைவது எப்படி?" என்ற மூன்று கேள்விகளுக்கும் விடையளிக்கும் வகையில் என்னுடைய பதிவுகளை எழுதியிருந்தேன். அதுபோல, இந்தப் பதிவில் புத்தகங்கள் ஏன் படிக்கவேண்டும்? என்பதற்கான இரண்டு முக்கிய காரணங்கள் பற்றிக் காணவிருக்கிறோம். வாருங்கள் காண்போம்!   உங்கள் படைப்பாற்றலை மேம்படுத்தும்:     ஒரு புத்தகத்தை நாம் படிக்கும்போது, அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைப் பற்றி நாம் இயல்பாக சிந்திக்கத் தொடங்குவோம். இந்த வரியின் கருத்துக்கள் சரியானதா?  நடைமுறைக்கு ஏற்றதா? என்று பல கேள்விகள் உங்களில் எழத் தொடங்கும். புத்தகத்தின் ஆசிரியர் கூறியுள்ள கருத்துக்களை நீங்கள் புரிந்து கொள்ள முற்படும் போது உங்களின் படைப்பாற்றல் திறன் (Creativity) இயல்பாக அதிகரிக்கும். எதையும் குறுகிய வட்டத்தில்  சிந்திக்காமல் அனைத்து கோணங்களிலும் உங்கள் மூளை சிந்திக்கத் தொடங்கி விடும்.      இதை நான் பிறரிடம் பேசி தெரிந்து கொண்டாலே அது எனக்கு பயனளிக்குமே? என்ற

இந்திய புராணம் கூறும் புற்றுநோய்க்கான மருந்து

படம்
   நான் பதிவிட்ட கடந்த சில பதிவுகள் ஒன்றில் இந்திய புராணங்கள் கூறும் அறிவியலைப் பற்றிக் கூறியிருந்தேன். அதில் அனுமன் சாலிசா மற்றும் பரிணாம வளர்ச்சி ஆகிய இரண்டின் அறிவியல் விளக்கங்களையும் நாம் பார்த்தோம். அதே போல இந்தப் பதிவிலும் நாம் ஒரு சுவாரசியம் ஊட்டும் புராண அறிவியல் கூற்று ஒன்றினைப் பற்றி தெளிவாகக் காணவிருக்கிறோம். வாருங்கள் காண்போம்! தேவி மகாத்மியம்:    தேவி மகாத்மியம் என்பது ஒரு பழங்கால புராணக் கதைகளைக் கூறும் புத்தகமாகும். இந்தப் புத்தகத்தில் மிகக் கொடிய புற்று நோயைக் (Cancer) குணப்படுத்துவதற்கான மருந்து பற்றிக் கதை வாயிலாகக் கூறியுள்ளனர். அந்தப் புராண காலத்தில், ரக்தபீஜன் என்னும் ஒரு கொடிய அரக்கன் இருந்தான். அவனது மிகப்பெரிய பலமே, எத்தனை முறை அவனைக் கொன்றாலும் மீண்டும் அவனுடைய ஒரு சொட்டு இரத்தத்திலிருந்து அவன் உயிர் பெற்று எழுவான். இதனால் மக்கள் அனைவரும் என்ன செய்வதென்று அறியாமல், அம்மன் தெய்வத்தின் உதவியை நாடியுள்ளனர்.    எத்தனை முறை அம்மன் அவனை அளித்தாலும்,  மீண்டும் அவனது ஒரு சொட்டு இரத்தத்தில் இருந்து உயிர்த்தெழுந்து விட்டான். இதனால் அம்மன், காளி தெய்வத்தின் உதவியை நாடி

புத்தகத்தின் மூலம் பயனடைவது எப்படி? பாகம்-2

படம்
  புத்தகம் என்பது நம் வாழ்வை மேம்படுத்த உதவும் ஒரு சிறந்த கருவியாகும் . அதை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம். அதற்கான ஒரு சிறந்த பதிவாக இது அமையும் என்று நான் நம்புகிறேன். இந்தப் பதிவில் நாம் புத்தகத்தின் மூலம் பயனடைவது எப்படி? என்பதையும், புத்தகத்தின் கருத்துக்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றியும் காணவிருக்கிறோம். வாருங்கள் காண்போம்! கருத்துக்களை அடிக்கோடிடுங்கள்:   நீங்கள் ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது அந்தப் புத்தகத்தின் சிறப்பான மற்றும் மறக்கக்கூடாத கருத்துக்களையோ அல்லது வரிகளையோ அடிக்கோடிட கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கான காரணம், ஒரு புத்தகத்தை முழுமையாக படித்த பின்பு, ஏதேனும் ஒரு சூழலில் நீங்கள் அந்தப் புத்தகத்தில் கற்றுக் கொண்ட விஷயங்களை நினைவுகூற முற்படுவீர்கள். அந்த சமயத்தில் மீண்டும் அந்த புத்தகத்தை புரட்டும்போது, நீங்கள் அடிக்கோடிட்ட அந்த வரிகள் மொத்த கருத்துக்களையும் எளிதில் உங்களுக்கு நினைவூட்டி விடும். உங்களுக்கு எந்த கருத்துக்கள் மிகவும் முக்கியம் எனத் தோன்றுகிறதோ அவற்றை மட்டுமே அடிக்கோடு இடுங்கள். படித்தவற்றை செயல்படுத்துங்கள