Science behind Indian traditions | இந்திய மரபுகளின் அறிவியல்(பாகம்-2)
Science behind Indian traditions:
நான் என்னுடைய கடந்த பதிவில், இந்திய கோவில்களுக்கு பின் ஒளிந்திருக்கும் மூன்று அறிவியல் இரகசியங்கள் பற்றி எழுதியிருந்தேன். ஆனால் அது மூன்றில் அடங்கும் அளவிற்கு சிறிதல்ல. நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அறிவியல் ரகசியங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் ஒரு சிலவற்றை தொகுத்து இரண்டாம் பாகமாக இந்தப் பதிவில் எழுதியுள்ளேன். படித்துப் நன்கு பயன்பெறுங்கள்.
கோவில்கள் கட்டப்பட்ட முறை:
இந்திய கோவில்களின் கட்டமைப்பை பொருத்தமட்டில், அடித்தளத்திலிருந்து மேலே செல்லும் போது ஒருவிதமான காற்றியக்கவியல் (aerodynamic) சார்ந்த அமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும். மேலும் அந்த கோபுரத்தின் உச்சியில் பல கலசங்களும் பொருத்தப்பட்டிருக்கும். இவ்வாறு உருவாக்கப்பட்டதற்கான முக்கியக் காரணம், பிரபஞ்சத்தின் மிக சக்திவாய்ந்த காற்றலைகளை எளிதில் தன்வசம் இழுத்து விடக்கூடிய தன்மை அந்த கோபுரத்தின் அமைப்பு மற்றும் கலசங்களுக்கு உள்ளது.
அந்த கோபுரத்தின் கலசங்களுக்குள் நெல், அரிசி மற்றும் வரகு போன்ற பாரம்பரிய நெல் வகைகள் இருப்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணம். நெல், இயற்கையாகவே சற்று காந்தத் தன்மையை அதிகமாகக் கொண்டது.
எனவே இந்த கலசங்கள் பிரபஞ்சத்தின் கொடிய அலைகளை தவிர்த்துவிட்டு, சக்திவாய்ந்த அலைகளை கோவிலின் தரையை நோக்கி இழுத்துவிடும். இந்த அலைகள் கோவிலைச் சுற்றிலும் நேர்மறையான அதிர்வுகளை உண்டாக்கி நமக்கு நன்மை அளிக்கிறது.
வாழைப்பழம் மற்றும் தேங்காய் எதற்கு?
பொதுவாக நாம் அனைவரும் விசேஷ நாட்களில் இந்திய கோவில்களுக்கு செல்லும்போது, தெய்வத்திற்கு படைக்க தேங்காய் மற்றும் வாழைப் பழங்களைக் கொண்டு செல்வோம். நீங்கள் எப்போதாவது நாம் ஏன் மற்ற பழங்களை தவிர்த்து தேங்காய் மற்றும் வாழைப்பழத்தை கொண்டு செல்கிறோம் என்று சிந்தித்ததுண்டா? அதற்கும் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது தோழர்களே!
வாழைப் பழத்தின் தோலும் சரி தேங்காயின் ஓடும் சரி, உபயோகித்த பின்பு நிலத்தில் வீசினால் அது ஒரு வாழை மரத்தையோ அல்லது தென்னை மரத்தையோ வளரச் செய்யும் வித்தாக அமையாது. நாம் அதனுடைய விதைகளை வாங்கி தான் பயிரிட முடியும். எனவே நம் முன்னோர்கள் காலத்தில் வாழ்ந்த விவசாயிகள், இந்த இரண்டையும் வளர்ப்பதற்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
அதனுடைய மதிப்பை உயர்த்தும் நோக்கத்தில் தான் நம் முன்னோர்கள் கோவில்களுக்குச் செல்லும் போது தேங்காய் மற்றும் வாழைப்பழத்தை கட்டாயமாக கொண்டு சென்றனர். அதன் பிறகு தான், அவை இரண்டும் நாள் தோறும் தெய்வத்திற்கு படைக்கப்படும் முக்கிய பொருளாகக் கருதப்பட்டது.
நெற்றியில் சந்தனம் எதற்கு?
நம்முடைய இந்திய கோவில்களில் வழிபாடு முடிந்த பிறகு சந்தனம் மற்றும் குங்குமத்தை பூசாரி நம்முடைய நெற்றிப்பொட்டில் ஒரு நொடி அழுத்தி வைத்து விடுவது வழக்கம். இதற்கான அறிவியல் காரணம் நம்முடைய மூளையின் சிந்திக்கும் திறன், நினைவாற்றல் திறன் மற்றும் செறிவுத திறனை தூண்டும் பகுதி நம்முடைய இமைகளுக்கு நடுவே உள்ள நெற்றிப்பொட்டில் தான் உள்ளது. அந்த இடத்தை மூன்றாம் கண் என்றும் கூறுவர்.
எனவே அங்கு நாம் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை தடவும் போது நம் மூளை
நன்றாக தூண்டப்படுகிறது. மேலும், சந்தனத்தை நம் கட்டைவிரல் கொண்டு ஓரிரு நொடிகள் அழுத்தித் தடவுவதால் நம் மூளை சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்கும். (Science behind Indian traditions)
என்னுடைய இப்பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி தோழர்களே! உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கருத்துப் பெட்டியில் பதிவிடவும்.
நன்றி!
அருமை, மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும், நம் பாரம்பரிய அறிவியல் விஞ்ஞானத்தை பற்றி பதிவிடுங்கள்
பதிலளிநீக்குநிச்சயம் பதிவிடுவேன். உங்கள் கருத்துக்கு நன்றி🙏
நீக்கு