புத்தகத்தின் மூலம் பயனடைவது எப்படி?
புத்தகம் என்பது நம் வாழ்வையே திசை திருப்பும் அளவிலான ஆற்றலைக் கொண்டது. இவ்வுலகில் மிகுந்த செல்வாக்கும், புகழும் பெற்று வாழ்ந்து வரும் தொழிலதிபர்கள் பலரும் தங்களுடைய வெற்றிக்கான ரகசியமாக புத்தகம் படிக்கும் பழக்கத்தையே முதன்மையாகக் கூறுகின்றனர். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது எவ்வாறு உடலுக்கு வலுவை சேர்க்கிறேதோ, அதுபோல தினமும் புத்தகம் படிப்பது மூளைக்கான ஒரு சிறந்த பயிற்சியாகும். இந்தப் பதிவில் நாம் எவ்வாறு ஒரு புத்தகத்தை முறையாக படிக்க வேண்டும் என்பது பற்றியும், அந்தப் புத்தகத்தின் மூலம் பயனடைவது எப்படி என்பதையும் காணவிருக்கிறோம். வாருங்கள் காண்போம்! படிக்கும் முறை: புத்தகத்தில் பல வகைகள் உள்ளன. ஒரு எடுத்துக்காட்டுக்கு பார்த்தோம் என்றால் சுய மேம்பாட்டுப் புத்தகங்கள், சரித்திர நாவல்கள், கற்பனைக் கதைகள், பொது அறிவு புத்தகங்கள் போன்றவற்றைக் கூறலாம். இவற்றில் நாம் தேர்வு செய்யும் வகையைப் பொறுத்து நம்முடைய படிக்கும் விதத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டும். (எ-டு): நீங்கள் ஒரு சுய மேம்பாட்டுப் புத்தகத்தை படிப்பதாக இருந்தால், அதில் நீங்கள் ஒரு பக்கத்தை கூட தவற விடாமல் படிக்க வேண்ட