ஈர்ப்பு விதி உண்மையா?
இவ்வுலகில் வாழும் மனித உயிர்களின் எண்ணங்கள் அனைத்தும் அதிர்வலைகளாக பரவி, இப்பிரபஞ்சம் முழுவதும் இயற்கையாகவே நிறைந்திருக்கும் அதிர்வலைகளை ஈர்க்கும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். நம் எண்ணங்களை கூர்ந்து கவனித்தால் அவை நேர்மறையானவையா?
எதிர்மறையானவையா? என்பது நமக்குப் புரியும். நேர்மறையான எண்ணங்கள் அலை அதிர்வுகளாக பரவி இப்பிரபஞ்சத்தில் உள்ள நேர்மறையான சூழல்கள், நபர்கள் மற்றும் நேர்மறையான பொருட்களையே ஈர்க்கும்.
எதிர்மறையான எண்ணங்கள் எதிர்மறையான சூழல்களையே கவர்ந்திழுக்கும். ஆம் தோழர்களே! நம் எண்ணங்களுக்கு அதிர்வலைகள் இருப்பதாக பல அறிவியல் ஆய்வுகளில் நிரூபணமாகியுள்ளது. நம் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய மூன்றையும் தீர்மானிப்பது நம் எண்ணங்களே. நம்முடைய எண்ணங்களின் சக்தியை வைத்து நாம் நினைத்ததை அடைவதற்கு மூன்று விதிகளை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
1) உங்கள் கண்களை மூடிக்கொண்டு, இந்தப் பிரபஞ்சத்திடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை தயங்காமல் கேளுங்கள். அது உங்களுக்கு அவசியமாக தேவைப்படும் ஒன்றாகவே இருக்க வேண்டும். அது உங்கள் நீண்ட நாள் கனவாகவும் இருக்கலாம்.
(எ-டு): நீங்கள் ஒரு மிகப் பெரிய மேடைப்பேச்சாளராக வேண்டும் என்று பிரபஞ்சத்திடம் கேட்பதாக வைத்துக் கொள்வோம்.
2) இப்போது நீங்கள், இந்தப் பிரபஞ்சத்திடம் கேட்டது நிச்சயமாக கிடைக்கும் என்று உறுதியாக நம்ப வேண்டும். அந்தப் பொருள், எப்படிக் கிடைக்கும், எவ்வாறு கிடைக்கும் என்றெல்லாம் சந்தேகிக்காமல், நிச்சயமாக கிடைக்கும் என்று நம்புங்கள். பலர் இந்த இரண்டாம் விதியை பின்பற்றுவதில் தான் தோல்வி அடைகின்றனர் .
3) இறுதியாக, நீங்கள் வேண்டும் என்று கேட்ட பொருள் கிடைக்கும் வரை, அது முன்பே கிடைத்தது போல் கற்பனைச் செய்து வாழுங்கள். மேற்கூறியது போல நீங்கள் பேச்சாளராக ஆகாவிட்டாலும் நீங்கள் மேடையில் ஏறி மக்களின் முன்பு பேசுவது போல் நாள்தோறும் மகிழ்ச்சியாக கற்பனை செய்து கொள்ளுங்கள். இந்த மூன்று விதிகளையும் சரியாகப் பின்பற்றினால், விரைவில் நீங்கள் நினைத்ததை, உங்கள் நேர்மறையான எண்ணத்தின் சக்தியால் ஈர்த்தே தீருவீர்கள். "எண்ணம் போல்தான் வாழ்க்கை" என்னும் வாசகத்தின் அர்த்தம் இதுவே.
" உங்கள் எண்ணங்களே செயல்களாக மாறும்."
இந்த மூன்று ஈர்ப்பு விதிகளையும் சரியாக பின்பற்றுபவர்கள் நிச்சயமாக அவர்கள் வாழ்வில் சிறந்த நிலையைை அடைவார்கள். அதில் எந்த ஐயமும் இல்லை. இதைத்தான் ஆங்கிலத்தில் "The Law Of Attraction" என்று கூறுவார்கள். நம் தமிழில் இதை "ஈர்ப்பு விதி" என்று கூறுகிறோம்.
இதை ஒரு தரமாவது உங்களுடைய அனுபவத்தின் மூலம் புரிந்து கொள்ள முயற்சியுங்கள். இந்தப் பதிவின் மூலம் நீங்கள் நம்முடைய எண்ண அதிர்வுகளின் சக்தியைப் பற்றி நன்றாக புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். என்னுடைய இந்தப் பதிவை படித்தமைக்கு மிகவும் நன்றி தோழர்களே! மேலும் ஒரு சிறந்த பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்.
நன்றி!
அருமை உங்கள் பதிவு மிகவும் சுவாரசியமாக உள்ளது
பதிலளிநீக்கு