ஆளுமைப் பண்புகளின் கட்டமைப்பு


                
     இந்தப் பரபரப்பான உலகில் ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும், ஆளுமைப் பண்புகள் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒரு மனிதருடைய ஆளுமைப் பண்புகளே, தான் எத்தகைய நடத்தை உடையவர் என்று இவ்வுலகிற்கு காண்பிக்கிறது. சிறந்த ஆளுமை பண்புகளை உடைய மனிதர்களே, அனைத்து துறைகளிலும் தங்களுக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து சிறப்பாக விளங்குகின்றனர். எனவே
இந்தப் பதிவில், நம் ஆளுமைப் பண்புகளை தீர்மானிக்கும் காரணிகள் பற்றிக் காண்போம்.

   நம்முடைய ஆளுமைப் பண்புகள்  நாம் அன்றாடம் யாருடன், எவற்றுடன் மற்றும் எவ்வாறு நேரம் செலவிடுகிறோம் என்பதைப் பொறுத்தே அமையும். ஆம் தோழர்களே! நாம் எவற்றுடன் அதிக நேரத்தைச் செலவிடுகிறோமோ அதற்கு  தகுந்தாற்போல் நாமும் மாறிவிடுவோம். நம்முடைய ஆளுமைப் பண்புகளும் அவற்றைச் சார்ந்ததாகவே அமையும். எடுத்துக்காட்டாக, ஒருவருடைய நண்பர் வட்டாரத்தை வைத்தே அவர் எத்தகைய ஆளுமைப் பண்புகளை உடையவர் என்பதை ஓரளவு கணித்து விடலாம்.  

  தீய நண்பர்களோடு சேரும் ஒருவர் தான் அன்றாடம் கேட்கும் சொற்களும், காணும் காட்சிகளும், செய்யும் செயல்களும் பெரும்பாலும் நன்மை உடையதாய் அமையாது. எனவே, நல்ல நண்பர்களோடு சேர்வது சிறந்த ஆளுமைப் பண்புகளை வளர்க்க ஒரு தளமாக அமையும்.
  
   இரண்டாவதாக, நாம் படிக்கும் புத்தகங்கள் நம்முடைய ஆளுமை பண்புகளை வெகுவாக தீர்மானிக்கிறது. தினமும், நல்ல புத்தகங்களை படிக்கும் ஒருவருடைய ஆளுமைப் பண்புகள் நேர்மறையாகவே இருக்கும். மேலும், அவர் தினமும் புதிதாக ஒன்றை கற்றுக் கொள்வதால், அவருடைய அறிவும் விரிவடையும். எனவே நம்முடைய ஆளுமைப் பண்புகளை வளர்க்கும் நல்ல புத்தகங்களைப் படிப்பதில் நம் கவனத்தைச் செலுத்த வேண்டும். 
            
           
    அடுத்ததாக, மரபணுக்களும் நம்முடைய ஆளுமைப் பண்புகளை தீர்மானிக்கும். கேட்பதற்கே சுவாரஸ்யமாக இருக்கும் இந்த உண்மை மறுக்கத்தக்கது அல்ல. ஆம் நண்பர்களே! ஒவ்வொரு மனிதரிடமும்  தனித்துவமான சில ஆளுமைப் பண்புகள் விதைக்கப்பட்டு இருக்கும். அதுவே அவருக்கு ஒரு சிறந்த பலமாக அமையும். அதைக் கண்டறிபவர் தனது வாழ்வில் விரைவில் முன்னேற்றம் அடைவார். 

  சிலர், அவர்களுடைய வாழ்வின் அனுபவங்கள் மூலம் தாமதமாகவும் அறிந்து கொள்வர். இதைத்தவிர மேலும் பல விஷயங்கள் நம்முடைய ஆளுமைப் பண்புகளை தீர்மானிக்கின்றன. அவற்றில் முக்கியமான மூன்று கூறுகளை நான் இந்த பதிவில் கூறியுள்ளேன். என்னுடைய இப்பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி நண்பர்களே! மேலும் ஒரு சிறந்த பதிவுடன் மீண்டும் உங்களை சந்திக்கிறேன். 
                              
                                   நன்றி!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மார்க்கோபோலோவின் தமிழ்ப் பயணக் குறிப்புகள்

reasons why you should read a book | புத்தகங்கள் ஏன் படிக்கவேண்டும்?

சிதம்பர நடராஜர் கோவில் இரகசியம்